நடுவானில் செக்ஸ்! விமானத்தின் கழிவறையில் உடலுறவு கொண்ட தம்பதிகள்.. ஷாக்கிங் வீடியோ வைரல்..

By Ramya s  |  First Published Sep 13, 2023, 9:18 AM IST

விமானத்தின் கழிவறையில் ஒரு தம்பதி உடலுறவு கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.


விமானத்தின் கழிவறைக்குள் தம்பதி உடலுறவு கொண்ட நிலையில், சக பயணிகள் அவர்களை உற்சாகப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லண்டனின் லூடன் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயினின் இபிசா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈஸிஜெட் விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) நடந்தது, அன்று முதல் இந்த வீடியோ வீடியோ வைரலாகி வருகிறது. விமானத்தின் ஊழியர் ஒருவர் கழிவறையின் கதவை திறந்த போது, அந்த தம்பதி உடலுறவு கொண்டிருந்தனர். விமானத்தில் இருந்த மற்ற பயணிகளும், தம்பதியினர் கழிப்பறைக்குள் உடலுறவு செய்துகொண்டிருப்பதைக் கண்டனர். இதை தொடர்ந்து பயணிகள் அவர்களை ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். 

EasyJet flight from Luton to Ibiza, and nobody was busted! The couple, loudly cheered on by other passengers as they joined the mile high club in full view. pic.twitter.com/u6UumSGHXM

— Trip McN33ly (@Trip_McN33ly)

 

Tap to resize

Latest Videos

undefined

இந்த செயலில் ஈடுபட்ட நபர், ஊழியர்களை பார்த்து சிரித்துக்கொண்டே கதவை உடனடியாக மூடினார்.விமானத்தில் இருந்த பயணிகள், கழிவறைக்குள் தம்பதியை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனர். இந்த சம்பவம் தங்களின் விமானம் ஒன்றில் நடந்ததை ஈஸிஜெட் நிறுவனம் உறுதிப்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், விமானம் இபிசாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியதும் போலீசார் விசாரணைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

உடலுறவுக்கு பிறகு தம்பதிகள் ஃபாலோ பண்ண வேண்டிய விஷயங்கள்.. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

எனினும் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விமானத்தில் இருந்த பயணி ஒருவர் பதிவு செய்த வீடியோ குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ பார்ப்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது. 

click me!