மாலத்தீவு அதிபர் தேர்தலை பார்வையிட்ட இந்திய தேர்தல் ஆணையர்!

By Manikanda Prabu  |  First Published Sep 11, 2023, 6:25 PM IST

மாலத்தீவு அதிபர் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பார்வையிட்டார்


மாலத்தீவு அதிபர் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அந்த வகையில், அந்நாட்டு அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு 2,82,395 பேர் தகுதி பெற்றுள்ளனர். 574 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 8 வாக்குச்சாவடிகள் வெளிநாடுகளில் வசிக்கும் மாலத்தீவு குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

மாலத்தீவு அரசியலமைப்பின்படி, அந்நாட்டு அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான முதல் சுற்று தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. இதனை இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேரில் பார்வையிட்டார்.

Tap to resize

Latest Videos

மாலத்தீவு தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் 3 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் மாலத்தீவுக்கு சென்று, அந்நாட்டு அதிபர் தேர்தலை பார்வையிட்டார்.

மாலே மற்றும் ஹுல்ஹுமாலேவில் அமைந்துள்ள 22 வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குப்பதிவு செயல்முறை, வாக்காளர் பதிவு, அடையாளம் காணும் முறை, வாக்களிப்பதற்கான வாக்குச்சாவடிகளின் ஏற்பாடுகள் ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டனர். மாலத்தீவின் தேர்தல் ஆணையம் எடுத்த பல முன்முயற்சிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். மேலும், தேர்தல் கண்காணிப்பு நிகழ்ச்சியில் வெளிநாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களும் பங்கேற்றனர்.

கர்நாடக அரசு அளித்த வாக்குறுதி.. பெங்களூரு பந்த் வாபஸ்.. தனியார் போக்குவரத்து சங்கம் அறிவிப்பு!

மாலத்தீவு தேர்தல் சட்டங்களின் கீழ், அந்நாட்டு அதிபர் உலகளாவிய மற்றும் ரகசிய வாக்கெடுப்பு மூலம் மக்களால் நேரடியாக ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். வெற்றி பெறும் வேட்பாளர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுற்றுகளில் பதிவான மொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பெற வேண்டும்.

அதன்படி, கடந்த 9ஆம் நடைபெற்ற முதல் சுற்று தேர்தலின்போது பதிவான வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்பட்டன. அதில், எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியவில்லை. எஅன்வே, மாலத்தீவு தேர்தல் விதிகளின்படி, வருகிற 30ஆம் தேதி இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் சுற்று தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே இரண்டாம் சுற்றில் போட்டியிடுவார்கள்.

click me!