பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருதான Order of the Nile விருதினை வழங்கி அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது
பிரதமர் மோடி தனது அமெரிக்க பயனத்தை முடித்துக் கொண்டு, இரண்டு நாள் பயணமாக எகிப்து சென்றுள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி வரவேற்றார். பிரதமர் மோடியின் எகிப்து பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மேலும் வலுப்படும் எனவும், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டி உயரிய அரச விருதான Order of the Nile விருதினை அந்நாட்டு அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி வழங்கி கவுரவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு எகிப்து தனது உயரிய அரச விருதை வழங்கியிருப்பது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணமாக பார்க்கப்படுகிறது.
VIDEO | President El-Sisi confers PM Modi with 'Order of the Nile' award - Egypt's highest state honour. pic.twitter.com/knzGCiPHlD
— Press Trust of India (@PTI_News)
எகிப்து அரசு வழங்கிய Order of the Nile விருதினையும் சேர்த்து கடந்த 9 ஆண்டுகளில் உலகின் பல்வேறு நாடுகளால் பிரதமர் மோடிக்கு இதுவரை 13 உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;
1. Companion of the Order of Logohu: பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்கான காரணத்திற்காகவும், குளோபல் சவுதின் விஷயங்களை முன்னெடுத்துச் சென்றதற்காகவும் பப்புவா நியூ கினியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருது பிரதமர் மோடிக்கு 2023ஆம் ஆண்டு மே மாதம் வழங்கப்பட்டது.
2. Companion of the Order of Fiji: பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமையை அங்கீகரிப்பதற்காக ஃபிஜியின் மிக உயர்ந்த விருது பிரதமர் மோடிக்கு 2023ஆம் ஆண்டு மே மாதம் வழங்கப்பட்டது.
3. Ebakl Award by the Republic of Palau: பப்புவா நியூ கினியா பயணத்தின் போது வழங்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு இந்த விருதினை 2023ஆம் ஆண்டு மே மாதம் வழங்கி பலாவ் குடியரசின் அதிபர் சுராங்கல் எஸ். விப்ஸ் ஜூனியர் கவுரவித்தார்.
4. Order of the Druk Gyalpo: பூடான் அரசின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான Order of the Druk Gyalpo 2021 டிசம்பரில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
5. Legion of Merit: சிறந்த சேவைகள் மற்றும் சாதனைகளின் விதிவிலக்கான நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் அமெரிக்க ஆயுதப் படைகளின் லெஜியன் ஆஃப் மெரிட் விருதினை, அமெரிக்க அரசாங்கம் பிரதமர் மோடிக்கு 2020ஆம் ஆண்டில் வழங்கி கவுரவித்தது.
எகிப்தில் பிரதமர் மோடி: சிந்தனை தலைவர்களுடன் சந்திப்பு; அல்-ஹக்கிம் மசூதிக்கு விசிட்!
6. King Hamad Order of the Renaissance: வளைகுடா நாட்டினால் வழங்கப்படும் உயரிய மரியாதையான மறுமலர்ச்சியின் மன்னர் ஹமாத் ஆணை எனும் பஹ்ரைன் ஆணை - 2019இல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
7. Order of the Distinguished Rule of Nishan Izzuddin: வெளிநாட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் உயரிய மரியாதையான நிஷான் இசுதீனின் சிறப்புமிக்க ஆட்சியின் ஆணை விருது பிரதமர் மோடிக்கு 2019இல் வழங்கப்பட்டது.
8. Order of St. Andrew award: ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது 2019ஆம் ஆண்டில் பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
9. Order of Zayed Award: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிக உயர்ந்த விருதான ஆர்டர் ஆஃப் சயீத் விருது 2019ஆம் ஆண்டில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
10. Grand Collar of the State of Palestine Award: வெளிநாட்டு பிரமுகர்களுக்கு பாலஸ்தீன நாட்டு அரசால் வழங்கப்படும் கிராண்ட் காலர் விருது 2018இல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
11. State Order of Ghazi Amir Amanullah Khan: காஜி அமீர் அமானுல்லா கான் மாநில ஆணை எனும் ஆப்கானிஸ்தானின் உயரிய விருது 2019ஆம் ஆண்டில் பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
12. Order of Abdulaziz Al Saud: முஸ்லிம் அல்லாத பிரமுகர்களுக்கு வழங்கப்படும் சவுதி அரேபியாவின் உயரிய கவுரவமான அப்துல் அஜீஸ் அல் சவுத் ஆணை 2016ஆம் ஆண்டில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
13. Order of the Nile: எகிப்து நாட்டி உயரிய அரச விருதான Order of the Nile விருதினை அந்நாட்டு அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி வழங்கி கவுரவித்துள்ளார்.