
வேகமாக சென்ற பெரிய விமானத்தால் 4 முறை பல்டி அடித்து பறந்த சிறிய விமானம்.....!
நவீன ரக சூப்பர் ஜம்போ ஜெட் ஏர்பஸ் A380-800 என்ற விமானம், எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமானது .இந்த விமானம் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி சென்றதாக தெரிகிறது .
சுமார் 34 ஆயிரம் அடி உயரத்தில் ஜம்போ ஜெட் ஏர்பஸ் A380-800 பறந்துக் கொண்டிருத்த போது, மாலத்தீவிலிருந்து துபாய் நோக்கி எதிர் திசையில் வந்த சிறிய விமானம், அதிவேகமாக வந்த ஜம்போ ஜெட் ஏர்பஸ் A380-800 விமானத்தின் அருகே நெருங்க நேரிட்டது .
அப்போது அதிவேகமாகமாக பறந்து வந்த ஜெட் ஏர்பஸ் விமானத்தினால் வெளியான சுழற்காற்றால் , எதிரே வந்துக்கொண்டிருந்த ஜெர்மனியை சேர்ந்த அந்த சிறிய விமானம் நிலைத்தடுமாறி சுமார் 10ஆயிரம் அடி வரை கீழ்நோக்கி விழ நேரிட்டது.
விமான ஓட்டுனரின் சாமர்த்தியத்தால், எப்படியோ கடலில் விழாமல் மீண்டும் பறக்க தொடங்கியது அந்த குட்டி விமானம்.இந்த அதிசய விபத்தால் சிறிய விமானத்தில் பயணம் செய்த 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது .
இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி நடைபெற்றது. இது குறித்து தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது .