கடந்த ஆண்டு அக்டோபரில், துபாய் காவல்துறை, Hongqi E-HS9 என்ற காரை தங்கள் படையில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்நத் காவல் துறையினர் பலவிதமான வாகனங்களை தங்களுடைய அன்றாட பணியில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் துபாய் போலீசார் உலக அளவில் உள்ள பிற காவல் துறையினரிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டு தெரிய காரணம் அவர்கள் பயன்படுத்தும் அதிவேக வாகனங்கள் என்றால் அது மையல்ல.
அந்த வகையில் தற்பொழுது தங்களுடைய காவல்துறையின் படையில் புதிதாக பென்ட்லி கான்டினென்டல் ஜிடி என்ற அதிவேக கார் ஒன்றை இணைத்துள்ளனர். பென்ட்லி கான்டினென்டல் GT-V8, இந்த கார் 8-சிலிண்டர் எஞ்சினைக் கொண்ட முரட்டு குதிரை எனலாம். வெறும் 3.9 வினாடிகளுக்குள் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் வல்லமைகொண்டது.
பாகிஸ்தானில் ஒரே நாளில் இரண்டு இந்து கோயில்கள் இடிப்பு! ராக்கெட் வீசப்பட்டதால் உச்சகட்ட பரபரப்பு!
கடந்த ஆண்டு அக்டோபரில், துபாய் காவல்துறை, Hongqi E-HS9 என்ற காரை தங்கள் படையில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு SUV வகை எலக்ட்ரிக் SUV ஆகும். துபாய் போலீஸ் ஆபிசர்ஸ் கிளப்பில் நடந்த அறிமுக விழாவில், பொது குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் ஜமால் அல் ஜல்லாஃப், மற்றும் இந்த பென்ட்லியின் தேசிய பிராண்ட் மேலாளர் டானி ககோன் முன்னிலையில் இந்த அறிமுக விழா நடைபெற்றது.
ஏற்கனவே துபாய் போலீஸ் பயன்படுத்தும் கார்கள் என்னென்ன?
லம்போர்கினி அவென்டடோர்
புகாட்டி வேய்ரான்
ஆஸ்டன் மார்ட்டின் One-77
ஃபெராரி FF
BMW ஐ8
ஆடி ஆர்8
நிசான் ஜி.டி.ஆர்
மசராட்டி கிரான்டூரிஸ்மோ
இதுபோல துபாய் போலீஸ் படையில் பல சூப்பர் ஸ்பீட் கார்கள் இடம்பெற்றுள்ளது.
தனிமை கொடுமை தான்.. அதுக்காக இப்படியா? - டார்ச்சர் செய்த பெண்மணி.. கடுப்பாகி கைது செய்த போலீஸ்!