ப்ளீஸ் இந்த ரகசியத்த வெளியில சொல்லாதே...! அதுக்கு பதிலா இத வெச்சிக்கோ...

Asianet News Tamil  
Published : Jan 13, 2018, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
 ப்ளீஸ் இந்த ரகசியத்த வெளியில சொல்லாதே...! அதுக்கு பதிலா இத வெச்சிக்கோ...

சுருக்கம்

DONT SAY THIS SECRET TO ANYONE COMPROMISED TRUMP TO HIS KEEP

ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட் உடன் உறவு வைத்த்திருந்த டொனால்ட் டிரம்ப் அதை வெளியில் சொல்லாமல் இருக்க $130,000 தொகை கொடுக்கப்பட்டதாக அமெரிக்க பிரபல நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

2006ம் ஆண்டு கலிபோர்னியாவில் ட்ரம்ப் மற்றும் ஸ்டீபனி கிளிஃபோர்ட் உறவு வைத்துக்கொண்டதாகவும் இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென், ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட்டுக்கு பணம் கொடுத்ததாக சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதிபர் டிரம்ப்க்கு இவானா, ’ரைசிங் ட்ரம்ப்’, மெலானியா என்ற மூன்று மனைவிகள் இருக்கிறார்கள். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் 3வது மனைவியாக மெலானியாவை மணம் முடித்த அடுத்த ஓராண்டில், அமெரிக்காவில் இருக்கும் முன்னணி ஆபாச பட நடிகையுடன் உல்லாசமாக இருந்துள்ளார் என அந்த செய்தியில் கூறியுள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்த ஆபாச பட நடிகை வாய் திறக்காமல் இருக்க பணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள சிட்டி நேஷனல் பேங்கின் வழியாக, இந்த பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு விளக்கம் அளித்துள்ளார் மைக்கேல் கோஹென்; 2011 முதலே இந்த வதந்தி பரப்பப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே இதற்கு மறுப்பு கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட் கூறுகையில்; ட்ரம்ப்பிடமிருந்து நான் பணம் பெற்றதாக கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யான செய்தி. அப்படி ஒரு உறவு நாங்கள் வைத்திருந்தால், அதை நீங்கள் செய்தியாக சொல்ல மாட்டீர்கள் என கூறியுள்ளார்.

நடிகை, ஸ்டீபனி கிளிஃபோர்ட்டின் தாய் ஷீலா வெய்மர் கூறுகையில், நான் எனது மகளுடன் பேசியே 12 வருடங்கள் ஆகிறது. எனவே ட்ரம்ப்புடன் அவருக்கு தொடர்பு இருந்ததா? இல்லையா? சட்டப்படி செட்டில்மென்ட் செய்யப்பட்டதா என எனக்கு எதுவுமே தெரியாது. எனது மகளுக்கு ஸ்டோர்மி என பட்டப்பெயர் இருப்பதுகூட எனக்கு சில நாட்களுக்கு முன்னே தெரிந்தது.  எனக்கு தெரிந்த வரை ட்ரம்ப் ஒரு நல்ல நிர்வாக திறமை கொண்டவர். அவர் அமெரிக்காவை நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறார் என கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மறுபடியும் வங்கதேசத்தில் கொடூரம்! 50 வயசு இந்து பெரியவரை தாக்கி தீ வைத்த கொலைவெறி கும்பல்!
பாசமாக வளர்த்த விஷப்பாம்பு.. உணவளிக்கப் போனவருக்கு நேர்ந்த விபரீதம்.. சீனாவில் நடந்த ஷாக் சம்பவம்!