அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினர் கட்டாயம் பதிவு செய்ய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
US Foreign National Registration Rule: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள், சட்டவிரோத குடியேற்றத்திற்குப் பிறகு பிறப்பித்துள்ள புதிய உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தங்கும் வெளிநாட்டினர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கும் வெளிநாட்டினர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
வெளிநாட்டினர் பதிவு செய்ய வேண்டும்
அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினர் கூட்டாட்சி அரசிடம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வெளிநாட்டினரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. H-1B மற்றும் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கான எச்சரிக்கை இந்த உத்தரவு H-1B விசா அல்லது மாணவர் விசாவில் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களுக்கு நேரடியாகப் பொருந்தாது. ஆனால், சட்டவிரோத தங்குதலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது.
H-1B விசா வைத்திருப்பவர்கள் எப்படி?
ஒருவர் H-1B விசாவில் இருக்கும்போது வேலை இழந்தால், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படலாம். எனவே, அனைத்து விசா வைத்திருப்பவர்களும் தங்கள் ஆவணங்கள் மற்றும் தகுதி நிலையை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ள வேண்டும். சுயமாக வெளியேறுவது பாதுகாப்பான வழி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டும். சுயமாக வெளியேறுவது பாதுகாப்பான மற்றும் விவேகமான நடவடிக்கை. இதன் மூலம் அவர்கள் தங்கள் விருப்பப்படி விமானத்தை தேர்வு செய்யலாம்.
டிரம்ப்பின் பதில் வரி பற்றி கவலையே வேண்டாம்! பாதிப்பு 0.1% மட்டும்தான்!
சிறை, அபராதம்
மேலும், குற்றம் ஏதும் செய்யாத பட்சத்தில் அவர்கள் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொள்ளலாம். சுயமாக வெளியேறுபவர்களுக்கு எதிர்காலத்தில் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக குடியேற வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார ரீதியாக பலவீனமானவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் மானிய விலையில் விமான டிக்கெட் வழங்கப்படும். விதிமுறைகளை மீறினால் அபராதம் மற்றும் சிறை செல்ல நேரிடும். யாரேனும் பதிவு செய்ய தவறினாலோ அல்லது சுயமாக வெளியேற மறுத்தாலோ கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
998 டாலர் அபராதம்
விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஒரு நாளைக்கு 998 டாலர் அபராதம் விதிக்கப்படும். மேலும், சுயமாக வெளியேறுவதாக கூறிவிட்டு நாட்டை விட்டு வெளியேறாதவர்களுக்கு 1,000 டாலர் முதல் 5,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். அதோடு, சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். பதிவு செய்யாத வெளிநாட்டினருக்கு எதிர்காலத்தில் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக நுழைய தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
போன்கள், லேப்டாப்களுக்கு விலக்கு.. திடீர் உத்தரவை பிறப்பித்த டிரம்ப்.. குஷியில் மக்கள்