இதில் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை பணத்தை தேர்தல் ரீதியாக செலவு செய்ததும் நிரூபிக்கப்பட்டது, இதனை அடுத்து இந்திய ரூபாய் மதிப்பில் அவருக்கு சுமார் 14 கோடி ரூபாய் அளவுக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளை பணத்தை தன் சொந்த செலவுக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு பெண் நீதிபதி ஒருவர் 2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளார். இது சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் "டொனால்ட் ட்ரம்ப் பவுண்டேஷன்" என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த அறக்கட்டளை நிதியை தனது சொந்த செலவுக்கு பயன்படுத்துவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது அதிபர் டிரம்ப் தனது அறக்கட்டளை நிதியை முறைகேடாக தன் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தினார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு, இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த அறக்கட்டளை முடக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை பணத்தை தேர்தல் ரீதியாக செலவு செய்ததும் நிரூபிக்கப்பட்டது, இதனை அடுத்து இந்திய ரூபாய் மதிப்பில் அவருக்கு சுமார் 14 கோடி ரூபாய் அளவுக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி செலியன் ஸ்கார்புலா, முன்னாள் ராணுவத்தினருக்கான வசூலிக்கப்பட்ட நிதியை கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ட்ரம்ப் முறைகேடாக செலவு செய்தார், என தன் உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டிரம்ப் இடம் அபராதமாக வசூலிக்கப்படும் பணத்தை அவருக்கு தொடர்பில்லாத வேறு 8 நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.