இந்தியர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதா சவுதி அரேபியா? உண்மை என்ன?

Published : Jun 09, 2025, 05:36 PM IST
eid al adha celebrated all over saudi arabia

சுருக்கம்

சவுதி அரேபியா இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Did Saudi Arabia Impose Restrictions On Indian Visas: மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், எகிப்து, ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், துனிசியா, அல்ஜீரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகிய 14 நாடுகளுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது. சவுதி அரேபியாயில் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வரும் நிலையில், அந்த நாடு பயண கட்டுப்பாடுகளை விதித்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்தியர்கள் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்ய தடையா?

இந்நிலையில், இந்தியர்கள் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை. இந்த விஷயத்தில் சவுதி அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெளிவுபடுத்தியபடி, ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் குறுகிய கால விசாக்களில் தற்காலிக கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன. இது ஹஜ் காலத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு நிலையான நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம்

அத்தியாவசியமற்ற பயணங்களைக் கட்டுப்படுத்துதல், புனித தலங்களுக்குள் அங்கீகரிக்கப்படாத நுழைவுகளுக்கு அபராதம் விதித்தல் மற்றும் பதிவுசெய்யப்பட்ட யாத்ரீகர்களை நிர்வகிப்பதில் வளங்களை மையப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சவுதி அரேபியா இந்த விசாக்களை நிறுத்தியதா?

இதற்காக ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட அளவிலான விசாக்களை சவுதி அரேபியா வழங்கி வரும் நிலையில், விசா கட்டுப்பாடுகள் இன்றி ஏராளமானோர் சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் மரணம் அடைந்த சோக சம்பவங்கள் நிகழ்ந்தன. இதை தடுக்கும் வகையிலேயே ஹஜ் பயண காலத்தில் மட்டும் வொர்க் விசா, உம்ரா, பிஸ்னஸ் மற்றும் குடும்ப விசாவை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சவுதி அரேபியா எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை

விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது தொடர்பாக சவுதி அரேபியா எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆகவே முறையான விசா வைத்திருக்கும் இந்திய குடிமக்கள் இன்னும் பயணம் செய்யலாம். ஆனால் புறப்படுவதற்கு முன்பு அருகிலுள்ள சவுதி தூதரகத்தில் நுழைவு அனுமதிகளை சரிபார்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!