நம்மை வச்சு செய்ய தயாராகும் கொரோனா ஹைப்ரிட் வேரியண்ட் டெல்டாகிரான் - இது லிஸ்ட்லயே இல்லையே..!

By Kevin Kaarki  |  First Published Mar 22, 2022, 1:36 PM IST

முந்தைய கொரோனா வைரஸ் வகைகளை விட மிகவும் வித்தியாசமாக தோன்றிய புது வைரஸ் பற்றிய விவரங்களை  ஆய்வாளர்கள் வெளியிட்டனர். 


கொரோனா பெருந்தொற்று கிட்டத் தட்ட முடிந்து விட்டதாக நினைத்து பல நாடுகளும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தளர்த்தி, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. எனினும், கொரோனா வைரஸ் தொற்றின் புது வேரியண்ட் எப்போது வேண்டுமானாலும் நம்மை அச்சுறுத்த வரலாம் என்ற அச்சம் பரவலாக இருந்து வருகிறது. 

கொரோனா வைரஸ் தாக்கத்தின் முந்தைய இடைவெளியின் போதே, எல்லோரும் பெருந்தொற்று முடிந்து விட்டதாக நினைக்க தொடங்கும் போது ஐ ஏம் வெயிட்டிங் என்பது போன்று ஒமிக்ரான் எண்ட்ரி கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புது வைரஸ் எல்லோரையும் துவம்சம் செய்யப் போகிறது என்ற நிலை எதிர்பார்க்கப்பட்ட போது, ஒமிக்ரான் வேகமாக பரவியதோடு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் நம்மை விட்டுவிட்டது. 

Tap to resize

Latest Videos

வைரஸ் பாதிப்பு:

இதுவரையிலான வைரஸ் பாதிப்புகளை தொடர்ந்து, எப்போது வேண்டுமானாலும் புது வைரஸ் நம்மை ஆக்கிரமித்து அதன் வேலையை காட்டலாம் என்ற அனுபவம் நம் அனைவருக்கும் ஒமிக்ரான் வேரியண்ட் தாக்கத்தின் போதே ஏற்பட்டு விட்டது. அந்த வகையில், தற்போது டெல்டாகிரான் பெயரில் புது வைரஸ் நம்மை அச்சுறுத்த காத்துக் கொண்டு இருக்கிறது. இது டெல்டா மற்றும் ஒமிக்ரான் வேரியண்ட்களில் ஹைப்ரிட் வகையை சார்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

முந்தைய கொரோனா வைரஸ் வகைகளை விட மிகவும் வித்தியாசமாக தோன்றிய புது வைரஸ் பற்றிய விவரங்களை பிப்ரவரி மாத மத்தியில் பாரிசில் உள்ள இன்ஸ்டிடியுட் பாஸ்டர் ஆய்வாளர்கள் வெளியிட்டனர். இந்த வைரஸ் சாம்பில் ஒரு முதியவரின் உடலில் இருந்து கண்டறியப்பட்டது. இது மரபணுக்கள் டெல்டா வேரியண்டில் உள்ளதை போன்றே இருந்தது. இதன் வெளிப்புறத்தின் மிகமுக்கிய அங்கம் ஒமிக்ரானில் இருந்ததை போன்றே இருந்தது.

ஹைப்ரிட் உருவாக்கங்கள்:

மார்ச் மாதத்தில் மேலும் மூன்று ஹைப்ரிட் உருவாக்கங்கள் அடங்கிய வைரஸ்களை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர். தற்போது பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் சுமார் 60-க்கும் மேற்பட்டோருக்கு டெல்டாகிரான் ஹைப்ரிட் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுதவிர டெல்டாகிரான் வைரசிலேயே பல உருமாற்றங்கள் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள டெல்டாகிரான் பாதிப்புகள், மற்ற நாடுகளில் கண்டறியப்பட்ட டெல்டாகிரான் வைரசை விட வித்தியாசமாக உள்ளன. இதன் காரணமாக டெல்டாகிரான் வைரசை ஒவ்வொரு பிரிவில் பட்டியலிட்டு வகைப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

உருமாற்றம்:

வைரல் ரெப்லிகேஷனின் போது ஒரு வைரஸ் மற்ற வைரசுடன் இணைந்து தனது மரபியலை மாற்றிக் கொள்வது மிகவும் இயல்பானது தான். அறிவியல் துறையில் இதுபோன்ற முறை "ரிகாம்பினேஷன்" (recombination) என அழைக்கப்படுகிறது. இது போன்று உருமாற்றம் அடைந்த வைரஸ் மனிதர்களிடத்தில் பரவும் போது, ரிகாம்பினேஷன் மேலும் அதிகரிக்கும். இதேபோன்ற நிலை தான் ஒமிக்ரான் பரவலின் போதும் ஏற்பட்டது. 

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்டு இருக்கும் டெல்டாகிராம் ஹைப்ரிட் வைரஸ் ஐரோப்பாவில் உள்ளதை விட வித்தியாசமாக இருப்பதால், இது போன்ற உருமாற்றங்கள் பலமுறை அரங்கேறி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். டெல்டாகிரான் வைரஸ் நம் உடலில் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. ஒமிக்ரானை ஓரம் கட்டி டெல்டாகிரான் நம் உடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

டெல்டாகிரான் பாதிப்பு:

இதுபற்றி சரியான முடிவுகளை எட்டுவதற்கு ஏற்ற டெல்டாகிரான் பாதிப்புகள் இதுவரை ஏற்படவில்லை. டெல்டாகிரான் வகைகளை ஆய்வு செய்யும் போது தான் இதுபற்றிய முடிவுக்கு வர முடியும். புதிய டெல்டாகிரான் நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று ஆய்வு செய்வதை விட புது வைரஸ் வேரியண்ட் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதே முதன்மையான ஒன்று ஆகும். 

புதிய டெல்டாகிரான் என்ன செய்யுமோ என்று அஞ்சுவதை விட தடுப்பூசி எடுத்துக் கொள்வது, முடிந்த வரை பாதுகாப்பாக இருப்பதன் மூலம் அனைத்து விதமான வைரஸ் பாதிப்புகளில் இருந்தும் நம்மை தற்காத்துக் கொள்ளலாம். கொரோனா வைரஸ் தடுப்பூசி சமீபத்தில் கண்டறியப்பட்ட புதுவித வைரஸ்களையும் எதிர்க்கும் திறன் கொண்டிருக்கிறது. 

click me!