மரியுபோலில் உள்ள பள்ளி, தியேட்டர், தேவாலயம் மற்றும் மருத்துவமனை என எதையும் விட்டு வைக்காமல் ராக்கெட் ஏவுகணைகளை வீசி, ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த தாக்குதலால் மரியுபோல் நகரம் தரைமட்டமாகி வருகிறது. மின்சப்ளை இல்லை. குடிநீர் இல்லை. உணவுப்பொருட்களும் மிகமிக குறைந்த அளவே உள்ளன. ஆனாலும் மரியுபோலில் உள்ள 4 லட்சம் மக்களும் வருவது வரட்டும் என்று தைரியமாக உள்ளனர்.
ஆயுதங்களை ஒப்படைத்து, சரணடைந்து விடுங்கள். இல்லாவிட்டால் பேரழிவுக்கு தயாராக இருங்கள். மக்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்’ என்று மரியுபோல் நகரை முற்றுகையிட்டுள்ள ரஷ்ய ராணுவம் விடுத்துள்ள மிரட்டலுக்கு அஞ்சாமல் உக்ரைன் ராணுவ வீரர்களும் தில்லாக எதிர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
ரஷ்யா 26-வது நாட்களாக தாக்குதல்
நேட்டா படையில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா 26-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சூப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. பொதுமக்கள் இறந்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க;- உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா... கடுப்பான புதின் கண்டனம்!!
மரியுபோல் நகரம் தரைமட்டம்
மேலும், மரியுபோலில் உள்ள பள்ளி, தியேட்டர், தேவாலயம் மற்றும் மருத்துவமனை என எதையும் விட்டு வைக்காமல் ராக்கெட் ஏவுகணைகளை வீசி, ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த தாக்குதலால் மரியுபோல் நகரம் தரைமட்டமாகி வருகிறது. மின்சப்ளை இல்லை. குடிநீர் இல்லை. உணவுப்பொருட்களும் மிகமிக குறைந்த அளவே உள்ளன. ஆனாலும் மரியுபோலில் உள்ள 4 லட்சம் மக்களும் வருவது வரட்டும் என்று தைரியமாக உள்ளனர். அங்குள்ள உக்ரைன் ராணுவ வீரர்களும், சளைக்காமல் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கின்றனர்.
சரணடையும் பேச்சுக்கே இடமில்லை
இந்நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள் மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, சரணடைய வேண்டும். இல்லையெனில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ரஷ்யா ராணுவ படை எச்சரித்துள்ளது. சரணடையும் பேச்சுக்கே இடமில்லை. ரஷ்யா தனது தவறுகளை உணர்ந்து திருந்த வேண்டும். மரியுபோலில் உள்ள ராணுவ வீரர்கள், இறுதி வரை போராடுவார்கள்’ என்று உக்ரைனின் துணை பிரதமர் ஐரைனா வெரஷ்சுக் கூறியுள்ளார்.