
Pakistan admits to supporting terrorists: பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்து ஆதரித்து வருவதாக அதன் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புக்கொண்டதன் மூலம் பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஸ்கை நியூஸின் நிகழ்சி தொகுப்பாளர் யால்டா ஹக்கிமுடன் உரையாடும்போது, "தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நீண்ட காலமாக ஆதரவளித்து, பயிற்சி அளித்து, நிதியுதவி அளித்து வருவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?" என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கிறார்.
உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
அதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப், "அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட மேற்கத்திய நாடுகளுக்காக சுமார் 3 தசாப்தங்களாக (30 ஆண்டுகள்) இந்த மோசமான வேலையை நாங்கள் செய்து வருகிறோம். அது ஒரு தவறு. அதற்காக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், அதனால்தான் நீங்கள் இதை என்னிடம் சொல்கிறீர்கள். சோவியத் யூனியனுடனான போரிலும், பின்னர் 9/11க்குப் பிந்தைய போரிலும் நாங்கள் சேரவில்லை என்றால், பாகிஸ்தானின் நடவடிக்கைகள் குற்றமற்றதாக இருந்திருக்கும்'' என்றார்.
இந்தியாவுடன் போர் சாத்தியம்
மேலும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் ஸ்கை நியூஸ் தொகுப்பாளர் யால்டா ஹக்கிமுடனான நேர்காணலில் இந்தியாவுடன் "முழு அளவிலான போர்" சாத்தியம் என்று எச்சரித்துள்ளார். ஆசிஃபின் இந்த வெளிப்படையான பேட்டி பாகிஸ்தான் பல ஆண்டுகளாக இந்த பயங்கரவாத குழுக்களுக்கு புகலிடம் அளித்து வருவதை அம்பலப்படுத்தியுள்ளது.
சண்டைக்கு ரெடியா.. இந்தியா - பாகிஸ்தான் போர் ஆரம்பமா.? மோடி பிளான்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல இராஜதந்திர நடவடிக்கைகளை அறிவித்தது, அதாவது அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை (ICP) மூடுவது, பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு SAARC விசா விலக்குத் திட்டத்தை (SVES) நிறுத்தி வைப்பது, அவர்கள் 40 மணி நேரத்திற்குள் தங்கள் நாட்டிற்குத் திரும்புமாறு அறிவுறுத்துவது, இரு தரப்பிலும் உள்ள உயர் ஆணையங்களில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்றவை ஆகும்.
பிரதமர் மோடி உறுதி
மேலும் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து 1960 இல் கையெழுத்தான சிந்து நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா அதிரடியாக நிறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் மற்றும் அதில் சதி செய்தவர்கள் தங்கள் கற்பனைக்கு எட்டாத தண்டனையை அனுபவிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போருக்கு அறிகுறி! இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான்! எல்லையில் படைகளை குவிக்கிறது!