சீனாவில் வெகுவாக குறைந்த உயிரிழப்பு..!! கொஞ்ச கொஞ்சமாக வலுவிழந்த கொரோனா..!!

Published : Mar 12, 2020, 12:55 PM IST
சீனாவில் வெகுவாக குறைந்த உயிரிழப்பு..!!  கொஞ்ச கொஞ்சமாக வலுவிழந்த கொரோனா..!!

சுருக்கம்

அதேபோல பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ,793 ஆக உயர்ந்துள்ளது .  அதாவது ஜனவரி மாதத்திற்கு பின்னர் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது .  புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது .

சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3169 ஆக உயர்ந்துள்ளது ,  நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த  நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது .  சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி ஏராளமான மனித உயிரிழப்புகளை  ஏற்படுத்தியுள்ளது .  சீனாவில் மட்டுமல்லாது நூற்றுக்கும் அதிகமான நாடுகளுக்கு இது பரவி உள்ளது .  குறிப்பாக இத்தாலி ,  ஈரான் ,  தென்கொரியா ,  ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் கடுமையாக உள்ளது. 

 

இதற்கிடையில் உலக  சுகாதார நிறுவனம்  கொரோனாவை  கொள்ளை நோயாக அறிவித்துள்ளது .  கரோனா வைரஸ் வீரியம் குறைந்துள்ள காரணத்தினால் சீனாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது என சீன நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  ஆனாலும் வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது .  கரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று மட்டும் 11 பேர் பலியாகினர் . இதனால்  பலியானவர்களின் எண்ணிக்கை 3,169 ஆக உயர்ந்துள்ளது . 

அதேபோல பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ,793 ஆக உயர்ந்துள்ளது .  அதாவது ஜனவரி மாதத்திற்கு பின்னர் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது .  புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது .  உகான்  நகரில் நேற்று புதிதாக 8 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ,627 பேர் பலியாகியுள்ளனர் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

உனக்கு நாங்க இருக்கோம் ராசா... ஆதரவற்ற இளைஞரின் திருமண அழைப்பை ஏற்று படையெடுத்து வந்த 10 ஆயிரம் பேர் - சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்
Flight Luggage: விமானத்தில் ஏன் இவ்வளவு எடை கட்டுப்பாடு? பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய காரணம்