தலைநகர் கொழும்பில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் இன்று மதியம் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
தலைநகர் கொழும்பில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் இன்று மதியம் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத வகையில் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் சொல்ல முடியா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இதனால், போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.
இதையும் படிங்க;- sri lanka crisis: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச சவுதி அரேபியாவுக்கு தப்பிக்கிறார்? சி்ங்கப்பூருக்கு பறந்தார்
இதனால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தற்காலிக இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- இலங்கையில் அமைதியை நிலைநாட்ட தமிழ் தலைவர்களிடம் கலந்துரையாட வேண்டும்: ஜனத் ஜெயசூர்யா
இந்நிலையில், தலைநகர் கொழும்பில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதன் காரணமாக கொழும்புவில் இன்று மதியம் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேற போராட்டக்காரர்கள் முடிவெடுத்துள்ளனர். தங்களது கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை அரசின் கட்டங்களை திரும்ப ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.