பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண்ணின் காதில் உயிருள்ள நண்டு சிக்கி இருந்தது. இந்த வீடியோவை ஒருவர் டிக்டாக் என்னும் செயலியில் பகிர்ந்துள்ளார். தலைப்பின்படி, புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் ஸ்நோர்கெல்லிங் செய்து கொண்டிருந்த பெண்ணின் காதில் சிறிய நண்டு நுழைந்தது. காதுக்குள்ளே ஊறும் நண்டை வெளியேற்ற நண்பர் ஒருவர் மீண்டும் மீண்டும் முயற்சிப்பதை வீடியோ காட்டுகிறது. அந்த நபர் ஒரு பின்னை பயன்படுத்தி பெண்ணின் காதில் இருந்து நண்டை அகற்ற முயற்சிப்பதைக் காண முடிகிறது. பல முறை முயற்சி செய்த பிறகு நண்டு வெளியேறியது. இதனால் அந்த பெண் வலியில் கத்தி கதறுகிறார்.
Snorkelling in San Juan. crab yo என்ற தலைப்பில் டிக்டாக் செயலியில் இந்த வீடியோவின் தலைப்பு இருந்தது. இதை கண்டு உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு திகிலூட்டும் வகையில் இருந்ததுள்ளது இந்த நண்டு வீடியோ. இதன்மூலம் மக்கள் மிகவும் எச்சரிக்கை இருக்க வேண்டும். மேலும் பூச்சிகள் காதுக்குள் நுழையும் வாய்ப்பு அதிகம் என்பதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்த வீடியோ பகிர்வு தளத்தில் இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் இதனை பல மில்லியன் பேட் கிளிப் செய்துள்ளதால் இந்த விடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதோடு வைரலாகியுள்ளது.
பலரும் இதை கண்டு அச்சமடைந்தனர். இது காண்பவருக்கு தங்கள் காதுகளுக்குள் புகுந்தது போல கூச்சத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். இதுக்குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணான டெய்சி வெஸ்ஸிடம் கேட்கையில், நான் இன்னும் நீர் விளையாட்டுகளை முற்றிலுமாக நிறுத்தவில்லை என்றார். அவர் அடுத்த நாள் கயாக்கிங் சென்றார். ஸ்நோர்கெல்லிங் செய்யும் போது காது செருகிகளை அணியுமாறு அவர் தனது பார்வையாளர்களை வலியுறுத்தினார். எனவே மக்கள் நீரில் விளையாடும் போது காதுசொருகிகளை அணிந்துக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்த வீடியோ நீரில் விளையாடும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.