இந்திய கணவன்-மனைவி உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்!! கலிஃபோர்னியா சோகம்

By Selvanayagam PFirst Published Oct 31, 2018, 10:05 AM IST
Highlights

கலிஃபோர்னியாவில் உள்ள யோசெமைட் தேசிய பூங்காவில் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் 800 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனர். இருவரின் செல்ஃபி மோகம் அவர்கள் உயிரைப் பறித்திருக்கிறது.

உலக அளவில் செல்பி மோகத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. செல்பியால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன்மீதான மோகத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பலரும் விளக்கி வந்தாலும் பலரும் அதன் ஆபத்தை உணரவில்லை.

அண்மையில் மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சரின் மனைவி, கப்பல் ஒன்றில் அபாயகரமாக நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி பின்னர் அவர் மன்னிப்புக் கேட்டார்.

இநநிலையில் அமெரிக்காவில் வாழும் இந்திய தம்பதிகளான விஷ்ணு விஷ்வநாத், மீனாட்சி மூர்த்தி  என்ற தம்பதி, பலதரப்பட்ட சுற்றுலாத்தளங்களுக்கும் சென்று தங்களது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக யோசெமைட் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று மலைப்பகுதியின் முகடில் ஆபத்தான நிலையில், செல்பி எடுத்துள்ளனர்.

அப்போது எதிர்ப்பாராத விதமாக அவர்கள் 800 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளனர். அந்த சுற்றுலா தளத்தில் தடுப்புகள் ஏதும் இல்லை என்பதும் இவர்களின் மரணத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களது உடல்களை மீட்ட மீட்புக்குழுவினர், மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!