இந்திய விமானங்கள் தங்களது வான்வெளியில் பறக்க தடை விதித்தது. மேலும், இந்திய குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் விமானங்கள் செல்லவும் தடை போட்டது. இந்நிலையில் அந்நாட்டு பத்திரிகையாளர் நைலா இனாயத் டிவிட்டரில் பாகிஸ்தான் அமைச்சர் அலி அமீன் காந்தபூர் வெறித்தனமாக பேசிய வீடியோவின் ஒரு பகுதியை வெளியிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் மீது ஏவுகணைகளால் பாகிஸ்தான் தாக்கும் என அந்நாட்டு அமைச்சர் அலி அமீன் காந்தபூர் பேசியுள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது முதல் இந்தியா மீது பாகிஸ்தான் அரசு கடும் வெறுப்பில் உள்ளது. உலக சபைகளில் காஷ்மீர் விவகாரத்தை எடுத்து சென்று பாகிஸ்தான் புலம்பியது. ஆனால் இது எங்க உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா சிம்பிளாக சொல்லியது. மேலும், பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நின்றன. இதனால் பாகிஸ்தான் அசிங்கப்பட்டது.
ஆனால் கோபம் அடங்காத பாகிஸ்தான், இந்திய விமானங்கள் தங்களது வான்வெளியில் பறக்க தடை விதித்தது. மேலும், இந்திய குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் விமானங்கள் செல்லவும் தடை போட்டது. இந்நிலையில் அந்நாட்டு பத்திரிகையாளர் நைலா இனாயத் டிவிட்டரில் பாகிஸ்தான் அமைச்சர் அலி அமீன் காந்தபூர் வெறித்தனமாக பேசிய வீடியோவின் ஒரு பகுதியை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் காஷ்மீர் மற்றும் கில்கிட் பல்டிஸ்தான் விவகார துறை அமைச்சர் அந்த வீடியோவில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்தால், பாகிஸ்தான் போருக்கு நிர்பந்திக்கப்படும். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஆதரிக்காமல் இந்தியாவை ஆதரிக்கும் நாடுகளை நாங்கள் எங்களது எதிரியாக கருதுவோம். இந்தியா மற்றும் அதனை ஆதரிக்கும் நாடுகள் மீது ஏவுகணைகளால் தாக்குதல் நடத்துவோம் என பேசி இருந்தார்.