ஐஎஸ் தலைவன் அல் – பாக்தாதி கொல்லப்பட முக்கிய காணரமாக இருந்தது இது தான் ! டிரம்ப் வெளியிட்ட ரகசிய தகவல் !!

By Selvanayagam PFirst Published Oct 29, 2019, 11:10 PM IST
Highlights

ஐஎஸ் தலைவர் அல் – பாக்தாதியை அழிப்பதில் முக்கிய  பங்காற்றிய நாயின் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டரம்பி  தற்போது வெளியிட்டுள்ளார்..
 

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த தலைவரையும் சேர்த்து அமெரிக்க ராணுவம் கொன்றுவிட்டது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிறுவனத் தலைவர், அபுபக்கர் அல்-பக்தாதி. சிரியாவில் இஸ்லாமிய அரசை உருவாக்க வேண்டும், புனிதப் போர் தொடுக்க வேண்டும் என்று மூளைச்சலவை செய்து பிரச்சாரம் செய்ததால், பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள், பெண்கள் ஐ.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்டனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை 2014 ஆம் ஆண்டு இந்த அமைப்பு, கைப்பற்றியது. இதையடுத்து, அந்த அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி இஸ்லாமியக் குடியரசை உருவாக்கி விட்டதாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.இதையடுத்து அல் – பாக்தாதியைக் கொல்ல அமெரிக்க படைகள் திட்டம் வகுத்தன

இந்நிலையில் சர்வதேச அளவில் தேடப்பட்ட பயங்கரவாதியும் ஐஎஸ் அமைப்பின் தலைவருமாக இருந்த அல் – பாக்தாதியை அமெரிக்க சிறப்பு படை கடந்த வாரம் சுட்டுக் கொன்றது. சிரியாவில் அமெரிக்க நடத்திய தாக்குதலில் அவர் பலியானதாக அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்மாக அறிவித்தார்.

இந்நிலையில், ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அபு பக்கரையை கொல்லும் திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய நாயின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், 'ஐஎஸ் தலைவர் அல் – பாக்தாதியை பிடித்துக் கொல்வதில் மிக முக்கியப் பங்காற்றியது இந்த நாய்தான் ' என்று ட்வீட் செய்துள்ளார்.

ஆனாலும் சில பாதுகாப்புக் காரணங்களுக்காக நாயின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

click me!