கொரோனா வைரஸ் பரவல் முடிவதற்கான காலத்தை இப்போதைக்கு நெருங்கக்கூட முடியவில்லை என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் முடிவதற்கான காலத்தை இப்போதைக்கு நெருங்கக்கூட முடியவில்லை என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கூறுகையில், “கொரோனா வைரஸால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் இன்னும் நிறைய இடங்களில் பரவும். நாம் தற்போது இந்த வைரஸ் முடிவு பெற வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் அனைவரும் வாழ்க்கையைத் தொடங்க நினைக்கிறோம்.
ஆனால், நிதர்சனம் என்னவென்றால் கரோனா வைரஸ் பரவல் முடிவதற்கான அருகில் கூட நெருங்கவில்லை. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸை அழிப்பது தொடர்பாகக் கண்டறியப்பட்டுள்ள ஆராய்ச்சிகளைப் பற்றி மதிப்பீடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இந்த வாரம் நடைபெறவுள்ளது என அவர் கூறியுள்ளார். அவரது இந்தப்பேச்சு மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.