சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இதுவரை உயிரிழப்பு 15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 35 நாடுகளில் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
உலக முழுவதும் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து ருத்தரதாண்டவம் ஆடி வருகிறது. ஆயுத பலம், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்திலும் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவில் ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இதுவரை உயிரிழப்பு 15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 35 நாடுகளில் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. மக்கள் வீட்டை விட்ட வெளியேற வேண்டாம் என பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உத்தரவிட்டுள்ளன. கொரோனா மையம் கொண்டுள்ள இத்தாலியில் பலி எண்ணிக்கை 5,500-ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் இத்தாலியில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது.
அதேபோல், ஈரான் உயிரிழப்பு எண்ணிக்கை 1500-ஐ உயர்ந்துள்ளது. பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வல்லரசு நாடான அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 348-ஆக அதிகரித்துள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 80 பேர் இறந்துள்ளனர். 7000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதனால், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,900-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா சிறைக் கைதிகளையும் விட்டுவைக்கவில்லை. நியூயார்க்கில் உள்ள சிறை ஒன்றில் மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய கைதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க சிறையில் முதன்முதலாக கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.