கொரோனா வைரஸை நிரந்தரமாக்க அதிரடி திட்டம்... அமெரிக்கா மீது பகீர் குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RM  |  First Published Mar 23, 2020, 10:03 AM IST

உதவி செய்வதாக கூறி, ஈரானில் வைரஸ் நிரந்தரமாக இருக்க உதவும் ஒரு மருந்தை எங்களுக்கு வழங்கினால் என்ன செய்வது? 


உலகெங்கிலும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை அமெரிக்காவே திட்டமிட்டு உருவாக்கி இருக்கலாம் என ஈரான் உச்ச தலைவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

உலக நாடுகளை கொரானா வைரஸ் உலுக்கி எடுத்து வருகிறது. உலகம் முழுவதும் மரஅனடைந்தவர்களின் எண்ணிக்கை 14,643 ஆக அதிகரித்து வருகிறது. 192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,636 ஆக உயர்ந்துள்ளது. 

Latest Videos

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் 400-க்கும் அதிகமாகி வருகிறது. இத்தாலியைப் போல ஈரானிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகி உள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1685 ஆக அதிகரித்துள்ளது. 20,610 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இது குறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பேசுகையில், ’’நீண்டகால எதிரிகளிடையே பதற்றாங்கள் அதிகரித்த போதிலும் அமெரிக்கா தங்களுக்கு உதவி செய்ய முன்வந்தது. அதனை நான் நிராகரித்துவிட்டேன். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவுவதாக அமெரிக்கா பலமுறை முன்வந்தது. அவர்கள் தான் அந்த வைரஸை உருவாக்கியதாக ஒரு குற்றசாட்டு உள்ளது. அது உண்மையா? என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் எங்களுக்கு உதவ முன்வருவது விந்தையாக இருக்கிறது.

உதவி செய்வதாக கூறி, ஈரானில் வைரஸ் நிரந்தரமாக இருக்க உதவும் ஒரு மருந்தை எங்களுக்கு வழங்கினால் என்ன செய்வது? அமெரிக்க தலைவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல நடிப்பவர்கள்’’ என கூறி உள்ளார்.

click me!