அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனாவுக்கு உயிரிழப்பு… வெளியானது அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 12, 2020, 7:49 AM IST
Highlights

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சீனாவில் தற்போது கட்டுக்குள் வந்துள்ள வைரஸ் அமெரிக்காவில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 5,07,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  20,126 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவை அலற விட்டுவரும் கொரோனா வைரஸுக்கு 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இந்தியர்கள் 1,500 என்றும் கூறப்படுகிறது. 

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சீனாவில் தற்போது கட்டுக்குள் வந்துள்ள வைரஸ் அமெரிக்காவில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 5,07,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  20,126 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அதிக அளவிலான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதில், கேரளாவைச் சேர்ந்த 17 பேர், குஜராத்தைச் சேர்ந்த 10 பேர் , பஞ்சாபைச் சேர்ந்த 4 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் பலர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்றும் ஒருவர் மட்டும் 21 வயது நிரம்பியவர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.  நியூஜெர்சியில் 12க்கும் மேற்பட்ட அமெரிக்க-இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் நியூயார்க்கில் வசிக்கும் 15 இந்திய-அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். பென்சில்வேனியா, புளோரிடாவில் 4 இந்தியர்கள், டெக்சாஸ், கலிபோர்னியாவில் தலா 1 இந்தியர் உயிரிழந்துள்ளனர். நியூஜெர்சியில் 400க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கரோனா பாசிட்டிவ், நியூயார்க்கில் 1,000 பேருக்கு மேல் கரோனா பாசிட்டிவ் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

click me!