குளிர் காலத்தில் மீண்டும் வைரஸ் தாக்கும்..!! சீன ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 18, 2020, 5:32 PM IST
Highlights

மேலும் தெரிவித்துள்ள அவர்,  தொற்று நோய் பரவலை கண்டுபிடித்தல்,  சோதனை மற்றும் அதன் தொடர்பு மற்றும் தடம் அறிதல் , வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பாளரை உடனடியாக மருத்துவமனையில்  சேர்ப்பது ஆகியவைகள் தான்  தொற்றுநோயை கட்டுப்படுத்தும் ரகசியம் , 

கோடைக்காலத்தில் இருந்து தப்பித்தாலும் குளிர் காலமான நவம்பரில் இரண்டாவது அலை எழும்பும் என உலக நாடுகளுக்கு சீனா எச்சரித்துள்ளது .  உலகளவில் பரவியுள்ள கொரோனாவால் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர் ,  இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் இந்த வைரசை கட்டுபடுத்த முடியாமல்  அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் திணறி  வருகின்றன .  இந்நிலையில் குளிர் காலமான நவம்பரில் இரண்டாவது கொரோனா அலை  சீனா உள்ளிட்ட உலக நாடுகளை தாக்கும் என சீனாவுக்கான கொரோனா  தடுப்பு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் .  சீனாவில் ஷாங்காயில்  கொரோனா  தடுப்பு மருத்துவ நிபுணர் குழுவின் தலைவரும் கிழக்கு பெருநகரத்தின் உயர்மட்ட மருத்துவமனைகளில் தொற்றுநோயியல் துறையின்  நிபுணருமான ஜாங் வென் ஹோங், இதுகுறித்து தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸ் நோயை கோடைகாலத்தில் போதுமான அளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் , ஆனால் வரவிருக்கும் குளிர்காலத்தில் அதாவது நவம்பர் டிசம்பர் மாதங்களில் நிச்சயம் கொரோனா இரண்டாவது தாக்குதலை ஏற்படுத்தும் ,  சீனா உள்ளிட்ட நாடுகளில் அது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் ,  சீனாவில் இன்னமும் தொற்றுநோய் பரவல் இருக்கிறது .  இருந்தாலும் வைரஸின் ஆரம்ப பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போல மீண்டும் செய்ய தேவையில்லை .  சீன அரசு எந்த ஒரு பணிகளையும் இனி நிறுத்தாது  அதேநேரத்தில் வெளிப் பகுதிகளில் இருந்து வரும்  கொரோனா பரவல்  நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் .  தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தளர்வு ஆகியன சாதாரணமாக வாழ வழிவகுக்கும் ஆனால் இனி பாதிப்புகளை முற்றிலுமாக ஒழிக்க முடியாது .  தொற்று நோயை முழுமையாக கட்டுப்படுத்த பின்னரும் உலக நாடுகள் அதை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டி இருக்கும் என்றார். 

மேலும் தெரிவித்துள்ள அவர்,  தொற்று நோய் பரவலை கண்டுபிடித்தல்,  சோதனை மற்றும் அதன் தொடர்பு மற்றும் தடம் அறிதல் , வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பாளரை உடனடியாக மருத்துவமனையில்  சேர்ப்பது ஆகியவைகள் தான்  தொற்றுநோயை கட்டுப்படுத்தும் ரகசியம் ,  வரும் மே மாதத்திற்குள் அமெரிக்கா தனது பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ,  அமெரிக்காவும் சீனாவும்  இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும் ,  சீனாவைப் பொறுத்தவரையில் ஒருபோதும் மருத்துவ தொடர்புகளை நிறுத்தப் போவதில்லை , பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை  புதுப்பிப்பதற்கான முயற்சிகளாக சீனா மெல்ல மெல்ல கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன . வைரசின் மையப்பகுதியான வுஹானில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும்,  புதிய பாதிப்புகள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் சீன நாட்டவர்களால்தான் பரவுகிறது ,  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  
 

click me!