ஊரடங்கு தளர்த்தப்படுமென தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர்...!! மே- 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்குமென தகவல்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 18, 2020, 4:16 PM IST

இந்நிலையில் ஜெர்மனியில் நோய் கட்டுப்பாட்டை கணிக்கும்  ராபர்ட் கோச் என்ற ஆய்வு நிறுவனம் ,  ஜெர்மனியில் நபருக்கு நபர் தொற்று விகிதம் 0.7 ஆக குறைந்துள்ளதற்கான தரவுகளை வெளியிட்டுள்ளது .


ஜெர்மனியில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதால் அடுத்த சில நாட்களில் ஊரடங்கை தளர்த்தப்போவதாக அந்நாடு அறிவித்துள்ளது . வைரசில் இருந்து விடுபட்டு படிப்படியாக ஜெர்மனி இயல்பு நிலைக்கு திரும்பும் என நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார் .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  உலக அளவில் 20 . 26 லட்சம் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது  . 1.54 லட்சம் பேர் உலக அளவில் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர்.  அதேநேரத்தில் 5.78 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் . இந்நிலையில்  அமெரிக்கா ,  இத்தாலி ,  ஸ்பெயின் ,  பிரான்ஸ் , ஜெர்மனி பிரிட்டன் ,  துருக்கி உள்ளிட்ட நாடுகள்  மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் வைரஸ் தாக்கம் அமெரிக்காவில்  மிகத் தீவிரமாக உள்ளது .  கிட்டத்தட்ட 7 லட்சத்து 10 ஆயிரத்து  272 பேருக்கு அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அங்கு சுமார் 37 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது  ஒட்டு மொத்த  உலகையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . 

Latest Videos

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடக இத்தாலி ,  ஸ்பெயின் ,  பிரான்ஸ் ,  ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இருந்து வருகின்றன .  இந்நிலையில் ஜெர்மனியில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  ஆனால் அந்நாட்டில் பெரிய அளவில் உயிரிழப்புகள் இல்லை  வெரும் 4,362 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் .  இது உலக அளவில் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் ஜெர்மனியின் மருத்துவ துறை மீது மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது .  லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையிலும்  வெறும் நான்காயிரம் பேர் மட்டுமே உயிரிழந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது .  நிலையில் 85 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பெற்று  அங்கு குணமடைந்துள்ளனர் .  மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக அதிகம் இலையில் 51 ஆயிரத்து  645 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . 

வெறும் 5 ஆயிரத்து 13 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் .  எனவே இனி பெரிய அளவில் உயிரிழப்பு நேர்வதற்கு வாய்ப்பில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது . இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஜெர்மனியில் புதிதாக வைரஸ் தொற்று ஏதும் ஏற்படவில்லை எனவே வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நாடு இதை சாதகமாக பயன்படுத்தி,  ஊரடங்கை தளர்த்த முடிவு செய்துள்ளது.  இது குறித்து தெரிவித்துள்ள  அந்நாட்டின்  சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் ஜெர்மனியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது .  ஆரம்ப கட்டத்தில் இந்த வைரஸ் மிக வேகமாக இருந்தாலும்  சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ,  சமூக விலகல் ,  உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள்  காரணமாக வைரஸ் பரவுவது முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .  இதனால் அடுத்த வாரத்தில் ஜெர்மனியில் ஊரடங்கை  தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது . எனவே  சிறிய கடைகள் திங்கட்கிழமை முதல் திறக்கப்பட உள்ளன ,  மே 4ஆம் தேதி பள்ளிக்கூடங்கள்  திறக்கப்பட உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில் பிற கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும்,   பொதுவெளியில் இரண்டுக்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு அனுமதி இல்லை.  பொது நிகழ்ச்சிகள் மற்றும் அதிக கும்பல் கூடுவதே போன்றவற்றுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.   இந்நிலையில் ஜெர்மனியில் நோய் கட்டுப்பாட்டை கணிக்கும்  ராபர்ட் கோச் என்ற ஆய்வு நிறுவனம் ,  ஜெர்மனியில் நபருக்கு நபர் தொற்று விகிதம் 0.7 ஆக குறைந்துள்ளதற்கான தரவுகளை வெளியிட்டுள்ளது .  இந்நிலையில் இன்னும் பல ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கை தளர்தத முடிவு செய்துள்ளன.   மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் வரை  ஜெர்மனியில் முகமூடி அணிவது கட்டாயப்படுத்தப்படும் என்றும்  அதிக அளவில் ஜெர்மனியில் முகமூடிகள் உற்பத்தி செய்யப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
 

click me!