கொள்ளி வைக்கும் கொரோனா வைரஸ்... அடங்காத சீனாவின் அடுத்த அதிர்ச்சி!

By Thiraviaraj RM  |  First Published Oct 13, 2020, 12:51 PM IST

கொரோனா வைரஸ் பரப்பும் எறும்பு தின்னியை சீனா மருந்தாக பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


கொரோனா வைரஸ் பரப்பும் எறும்பு தின்னியை சீனா மருந்தாக பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் படிப்படியாக சீனா முழுவதும் பரவி பின்னர் உலகம் முழுவதும் பரவிவிட்டது. கொரோனா வைரஸால் உலகமே மிகப்பெரிய அவதியில் தள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. ஆனாலும், வௌவ்வால்கள், எறும்புத் தின்னிகளிடம் இயற்கையாகவே ஏராளமான கொரோனா வைரஸ்கள் இருக்கின்றன.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், சீனாவில் பாரம்பரிய மருத்துவத்தில் எறும்புத் தின்னியின் செதில்களை பயன்படுத்த அந்நாட்டு அரசு இன்னும் அனுமதியளித்து வருவது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக வெளியாகியுள்ளது. எறும்புத் தின்னிகளின் உடலை சுற்றி செதில்கள் இருக்கும். மற்ற விலங்குகளில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள இயற்கையாகவே எறும்புத் தின்னிகளுக்கு செதில்கள் இருக்கின்றன. இந்த செதில்களை சீன பாரம்பரிய மருத்துவர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

எறும்புத் தின்னிகளை பாதுகாக்க சீன அரசும் உறுதிமொழி எடுத்துள்ளது. ஆனால், அதன் செதில்களை பாரம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்த சீன அரசு இன்னும் அனுமதியளித்து வருகிறது. எறும்புத் தின்னி செதில்களை கொண்ட பொருட்களை விற்பனை செய்ய 221 நிறுவனங்களுக்கு சீன அரசு அனுமதியளித்துள்ளது.எறும்புத் தின்னி ஒரு உயிரினமாக சந்திக்கும் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, அதனால் கொரோனா தொற்று ஏற்படும் பெரும் அபாயம் இருக்கிறது. ஆனால், எறும்புத் தின்னிகளை தொடர்ந்து உணவிலும், மருத்துவத்திலும் பயன்படுத்த சீன அரசு அனுமதியளிப்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாக வெளியாகியுள்ளது.

click me!