இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 119 ஆக உள்ளது . கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்துவருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது . இதனால் சீனாவில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இது உலக அளவில் ஒரு நல்ல முன்னேற்றமாகவே கருதப்படுகிறது . சீனாவில் ஹூபெய் மாகாணம் வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா சீனா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது . இந்த வைரஸ் சீனாவின் மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது .
சீனாவில் இந்த வைரஸ் 31 மாகாணங்களில் வேகமாக பரவியது , இந்த வைரசால் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் , இந்த வைரஸை கட்டுப்படுத்த முறையான மருந்து இல்லாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே சென்றது அதே போல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது . ஆனால் சில தினங்களாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கியது , இறப்பு விகிதம் குறைந்தத அதே நேரத்தில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்தது .
இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 119 ஆக உள்ளது . கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்துவருகிறது. நேற்று புதிதாக 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் . மொத்தத்தில் நாடு முழுவதும் 80 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளொன்றுக்கு 40 முதல் 50 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு விகிதம் பாதியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .