நதி நீரில் கலந்த கொரோனா வைரஸ்..!! தண்ணீர் விநியோகம் நிறுத்தம் , சுழற்றி அடிக்கும் பாவம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 20, 2020, 5:13 PM IST

இந்நிலையில் பிரான்ஸ்  தலைநகரான பாரீசில் நகர் பகுதிகளை  சுத்தம்  செய்யவும் அங்குள்ள பூங்காக்களுக்கு  பாய்ச்சவும் தோட்டங்களுக்கு பயண்படுத்தவும்  தலைநகர் பாரீசில் உள்ள சீன் நதி மற்றும் எவர் கால்வாயில் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.  
 


பிரான்சின் தலைநகரான பாரீஸில் தெருக்களை சுத்தப்படுத்துவதற்கான பயன்படுத்தும் தண்ணீரில் கொரோனா வைரஸ் படிந்திருப்பது தெரியவந்துள்ளது.  இது இது பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  மெல்ல அந்நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தண்ணீரில் வைரஸ் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.   உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இந்நிலையில் கொரோனாவால்  அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது  பிரான்ஸ் ,  இங்கே இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 394 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .  சுமார் 19 ஆயிரத்து 718 பேர் உயிரிழந்துள்ளனர் .

 

Latest Videos

அதேநேரத்தில் 36 ஆயிரத்து 588 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்துள்ளனர் ,  96 ஆயிரத்து 598 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .  சுமார் 5 ஆயிரத்து 744 பேர் அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடி வருகின்றனர் . இந்நிலையில் கடந்த சில நாட்களாக  பிரான்சில் வைரஸ் தொற்று குறைந்திருப்பதாகவும் வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் அந்நாடு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸ்  தலைநகரான பாரீசில் நகர் பகுதிகளை  சுத்தம்  செய்யவும் அங்குள்ள பூங்காக்களுக்கு  பாய்ச்சவும் தோட்டங்களுக்கு பயண்படுத்தவும்  தலைநகர் பாரீசில் உள்ள சீன் நதி மற்றும் எவர் கால்வாயில் நீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது .  

அதே நேரத்தில் இந்த தண்ணீர்  குடிக்கவோ குளிக்கவோ ,  அதாவது மக்களின் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில்லை,  இந்நிலையில் பாரிஸில் நீர் ஆணையம் நாடு முழுதும் உள்ள  நீர்நிலைகளில் இருந்து 27 மாதிரிகளை எடுத்து அதை ஆய்வு செய்தது. அதில் 4 மாதிரிகளில் சிறிய அளவிலான புதிய வகை கொரோனா வைரஸ் கிருமிகள் படிந்திருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனால் கால்வாயில் இருந்து நீர் பாசனங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன .  அதே நேரத்தில் இதனால் எந்த பாதிப்பும் இல்லை தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என்றும் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . 

மேலும் குடிநீரில் இதுபோன்ற எந்த வைரஸ் கலப்பும் இல்லை என்றும் அது தனிப்பட்ட முறையில் நிர்வகிப்பதால்  அதை ஆபத்து இல்லாமல் உட்கொள்ள முடியும் என்றும் நகரத்தின் உயர் சுற்றுச்சூழல் அதிகாரி பிளேவல் தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் பிரான்சில் முழுவதுமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் விரைவில் நாடு இயல்பு நிலைக்கு திரும்பவும் என்றும் அந்நாட்டின் பிரதமர் எட்வர்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது . 

 

click me!