சீனாவுக்குள் நுழைந்து ஆராய அமெரிக்கா திட்டம்..!! கொரோனா மர்மத்தை அறிய ட்ரம்ப் முடிவு..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 20, 2020, 2:49 PM IST
Highlights

சீனா வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை .  வாஷிங்டன் எழுப்பிய பல கேள்விகளுக்கு  முறையாக சீனாவிடமிருந்து பதில் இல்லை . எனவே அமெரிக்காவிலிருந்து ஒரு வல்லுநர் குழுவை சீனாவுக்கு அனுப்பி ஆராய உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவை கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் குறித்து ஆராய அமெரிக்க வல்லுநர் குழுவை  சீனாவுக்கு அனுப்பப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.  அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் சீனா பொறுப்பேற்றுக்க வேண்டுமென ட்ரம்ப் சில நாட்களாக எச்சரித்து வந்த நிலையில் மீண்டும் அவர் இவ்வாறு கூறியுள்ளார் .  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா என சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது .  இதுவரை உலக அளவில்  20 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . 

சுமார் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து  105 பேர் உயிரிழந்துள்ளனர் இதுவரை எந்த நாடும் சந்தித்திராத அளவுக்கு கொரோனாவால் அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது . இதுவரை அமெரிக்காவில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 768 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 40 ஆயிரத்து 575 பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் அமெரிக்கா தான் சந்தித்துவரும் பேரிழப்பால் ஆற்றென துயருக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகி உள்ளது .  இந்நிலையில் தனது ஒட்டுமொத்த கோபத்தையும் அது  சீனாவின் மீது காட்டி வருகிறது , இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து எப்படி பரவியது என்பது குறித்து ஆராய அமெரிக்காவிலிருந்து ஒரு வல்லுநர் குழு  சீனாவுக்கு அனுப்பப்பட உள்ளது என கூறியுள்ளார்.  நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்  இதனை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் . 

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் ,  சீனாவுடன்  ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்  நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் பின்னர் இந்த வைரஸ் பற்றி நாங்கள் கண்டுபிடித்தோம் ,  அதைப்பற்றி நாங்கள் கண்டுபிடித்ததிலிருந்து நான் மகிழ்ச்சியாக இல்லை... வுகான் இன்ஸ்டியூட் ஆஃப் வைராலஜி ஆய்வு கூடத்திலிருந்து இந்த கொடிய வைரஸ் கசிந்ததா என்பது குறித்து  விசாரணையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக வுகான் வைரஸ் ஆய்வு கூடத்தில்  என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அமெரிக்கா பலமுறை முயற்சி செய்துள்ளது .  அந்த ஆய்வகத்தில் என்ன நடக்கிறது என்பதை  தங்களுக்கு வெளிபடையாக காட்ட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம் ,  ஆனாலும் இதுவரை  எங்களை அவர்கள்  முறையாக அழைக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார் .  தற்போது ஒரு விசாரணை நடத்தி அங்கு என்ன நடக்கிறது என்பதை  நாங்கள் கண்டுபிடிக்க உள்ளோம். 

கொரனா வைரசை சீனா கையாண்டது குறித்து பலமுறை கேட்டும் ,  சீனா வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை .  வாஷிங்டன் எழுப்பிய பல கேள்விகளுக்கு  முறையாக சீனாவிடமிருந்து பதில் இல்லை . எனவே அமெரிக்காவிலிருந்து ஒரு வல்லுநர் குழுவை சீனாவுக்கு அனுப்பி ஆராய உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இதுவரை அமெரிக்காவில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் மாகாணத்தில்  2 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  அங்கு மட்டும் 17 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர் .  கடந்த 8 நாட்களாக புதிய வைரஸ் தொற்று பரவல் 50 சதவீதமாக குறைந்துள்ளது .அதாவது ஒரு வல்லுனர் குழுவை அனுப்பி சீனாவில் ஆய்வு நடத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இதுவரையிலும்  சீனாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
 

click me!