Covid19 : "கொரோனா தான் பர்ஸ்ட்... இன்னும் நிறைய இருக்கு.." ஐநா பொதுச்செயலாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

By Raghupati RFirst Published Dec 29, 2021, 9:06 AM IST
Highlights

கொரோனா என்பது உலகம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இன்னும் நிறைய வரும் என்று எச்சரித்து இருக்கிறார் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ்.

கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகாலமாக உலக மக்களைத் தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கோவிட் 19 தொடங்கி உருமாறிய பல வைரஸ்கள் மக்களை தாக்கி உயிரை பறித்து வருகின்றன. தடுப்பூசி செலுத்தியும் வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. 

இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு,தடுப்பூசி போடுதல் என பல்வேறு கட்டுப்பாடுகளை  விதித்து வருகின்றன.  இந்த நிலையில் கொரோனா என்பது உலகம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் கூறியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என்று தெரிவித்துள்ளார். கொரோனா போன்று இன்னும் நிறைய பெருத்தொற்றுகள் வரும் என்று குறிப்பிட்டுள்ள ஆன்டனியோ குட்டரஸ், கொரோனா கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கும்போதே அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டும் என்றும் உலக பெருந்தொற்று தயாராதல் தினத்தையொட்டி, இதில் நாம் கவனம் செலுத்துவோம்’ என்றும் பதிவிட்டுள்ளார். கொரோனா மட்டுமல்லாமல், இன்னும் பல வைரஸ்கள் வரும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் கூறியிருப்பது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!