Baba Vanga : 2022 இல் புதிய வைரஸ்.. இப்படித்தான் இருக்கும் 2022.. எச்சரிக்கும் பாபா வாங்கா !

By Raghupati RFirst Published Dec 28, 2021, 12:55 PM IST
Highlights

2022 இல் உலகத்தை புதிய வைரஸ் தாக்கும் என்று கணித்து இருக்கிறார் பாபா வாங்கா. இவர் இதற்கு முன்பு சொன்ன கணிப்புகள் நடந்துள்ளது என்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர் பாபா வாங்கா. 1911ம் ஆண்டு பிறந்த இவர், தனது 12வது வயதில் இயற்கை பேரிடரில் சிக்கி தனது கண் பார்வையை இழந்தார். இதன் பின்னர் அவருக்கு எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் சக்தி கிடைத்ததாக நம்பப்படுகிறது. 2004 சுனாமி பாதிப்பு, சோவியத் யூனியன் பிரிவு, ரஷ்ய அணு உலை விபத்து, செப்டம்பர் 11 தாக்குதல், 45வது அமெரிக்க அதிபர், விளையாட்டு தொடர்களின் முடிவுகள் உள்ளிட்டவற்றை அவர் கணித்திருக்கிறார். இதுவரை அவர் கணித்தவைகள் 85% துல்லியமாக நடந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 5079ம் ஆண்டு வரை கணிப்புகளை பதிவு செய்துள்ள இவர் கடந்த 1996ம் ஆண்டு தன்னுடைய 84வது வயதில் மறைந்தார். அவரின் இறப்பையும் அவர் கணித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2022ம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கும் எனப்து குறித்து அவர் வெளியிட்டுள்ள கணிப்புகளை காணலாம்.

அதன்படி, "2022ம் ஆண்டு அதிகளவில் பூகம்பங்களும், சுனாமிகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படவிருக்கும் சுனாமியால் இந்தியா மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். மிக மோசமான வைரஸ் ஒன்றை சைபீரியாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள்.

புவி வெப்பமடைதலின் பேரழிவு விளைவுகள் காரணமாக, வைரஸ் விரைவாக கட்டுப்பாட்டை மீறும். இந்தியாவில் வெப்பநிலை 50 டிகிரியை தொடும். மேலும் இந்தியாவில் கடுமையான வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டு அதன் மூலம் உணவு தானிய பேரழிவு ஏற்படும். வேற்றுகிரக வாசிகளான ஏலியன்கள் பூமியில் உயிர்களின் வாழ்க்கை குறித்து அறிய ‘Oumuamua’ எனும் செயற்கைகோளை பூமிக்கு அனுப்பி வைப்பார்கள்.

இந்த செயற்கைக்கோள் மனிதர்களை சிறைபிடித்து செல்லும். 2130ம் ஆண்டு வாக்கில் ஏலியன்களின் உதவியோடு நீருக்கடியில் எப்படி வாழ்வது என்பதை மனிதர்கள் கற்றறிவார்கள்.  உலக நாடுகளின் முக்கிய கடற்கரையை ஒட்டிய நகரங்கள் தண்ணீரில் மூழ்கும். மொபைல்போன்கள் போன்ற எலக்ட்ரானிக் கேட்ஜெட்களில் மனிதர்கள் அதிக நேரத்தை செலவிடுவார்கள். இதனால் மனிதர்கள் குழம்பித் தவிப்பார்கள்" என்று கணிக்கப்பட்டுள்ளது.

click me!