நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கு கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 889 ஆக இருக்கிறது. இதையடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொரோனா வைரஸ் இத்தாலியில் தற்போது உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது. ஐரோப்பிய நாடான அங்கு இதுவரையில் 92 ஆயிரத்து 472 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கு கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 889 ஆக இருக்கிறது. இதையடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது.
]உலகம் முழுவதும் தற்போது வரை 6 லட்சத்து 50 ஆயிரத்து 929 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 30 ஆயிரத்து 299 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் எகிறி வரும் கொரோனா வைரஸ் நோயை சமாளிக்க முடியாமல் ஒட்டுமொத்த உலக நாடுகளும் திணறி வருகின்றன. கொரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
சீன நாட்டில் முதன் முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் வந்துள்ளது. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி கொண்டிருக்கும் நிலையில் போக்குவரத்துகள் சிறிது சிறிதாக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. எனினும் உலகத்தின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் கோர தாண்டவத்தை தொடங்கியுள்ளது. இத்தாலி,ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ், பாகிஸ்தான், இந்தியா என உலகத்தின் 199 நாடுகளில் பரவி மக்களின் உயிர்களை அசுரவேகத்தில் பறித்து வருகிறது.