
கொலம்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 254 அதிகரித்துள்ளது. 300க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு எல்லையை ஒட்டிய புட்டுமயோ மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஆர்ப்பரித்து ஓடுகின்றன.
இதற்கிடையே மலைப்பிரேதசமான மோகோவாவில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. எங்கு பார்க்கிலும் மரண ஓலம்..பலர் உயிருக்கு போராடினர். உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தில் இதுவரை 254 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கிய 300 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த அந்நாட்டு அதிபர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் வந்து பார்வையிட்டார்.இயல்பு நிலை திரும்பும் வரை போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறும் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது.