கோக்ககோலாவில் மிதந்த மனிதகழிவுகள்.. அய்யோ… இதுக்கு அப்புறமும் குடிக்கனுமான்னு யோசிங்க...

First Published Mar 30, 2017, 9:44 AM IST
Highlights
human wastage in cocacola


வடக்கு அயர்லாந்தின் லிஸ்பர்ன் நகரில் உள்ள கோக்ககோலா நிறுவனத்தில் இருந்த கேன்களில் மனிதக்கழிவுகள் மிதந்ததால் அங்கு தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜெர்மனியில் இருந்து வெளிவரும் “தி பெல்பாஸ்ட் டெலிகிராப்” நாளேடு வெளியிட்ட செய்தியில் இது குறித்து  தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில் கூறப்பட்டுள்ளதாவது-

வடக்குஅயர்லாந்தின் தலைநகர் லிஸ்பர்ன் நகரில் செயல்பட்டு வரும் கோக்ககோலா நிறுவனத்துக்கு காலியான புதிய கேன்கள் வழக்கமாக இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரப்படும்.

ஆனால், இந்த முறை ெஜர்மனியில் இருந்து லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. கடந்த வாரம் அந்த கேன்களில் கோக்ககோலாவை நிரப்பும் பணியிலும், சுத்தப்படுத்தும் பணியும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, ஏராளமான கேன்களில் நாற்றம் குடலைப் புரட்டிக் கொண்டு வந்துள்ளது. அந்த கேன்களை ஊழியர்கள் பார்த்தபோது, அதில் “மனிதக்கழிவுகள்” இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக உற்பத்தியை நிறுத்தி எந்திரங்களை ஏறக்குறைய 15 மணிநேரத்துக்கும் மேலாக சுத்தப்படுத்தும் பணியைச் செய்தனர்.

மேலும், ஏற்கனவே கோக்ககோலா அடைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த கேன்களும் உடைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டன. இதனால்,அந்த நிறுவனத்துக்கு ஏறக்குறைய 2 நாட்கள் உற்பத்தி தடைபட்டது.

இதுகுறித்து கோக்ககோலா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கூறுகையில், “ஜெர்மனியில் இருந்து லாரிகளில் அந்த கேன்கள் கொண்டுவரும் போது, அகதிகள் அந்த லாரியில் பயணித்து இருக்கலாம்.அப்போது அவர்கள் தங்களின் இயற்கை உபாதையை கழிக்க வேறு வழியின்றி இந்த புதிய கேன்களை பயன்படுத்தி இருக்கலாம்.

ஆனால், கேன்களில் “மனிதக்கழிவுகள்” இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், உடனடியாக உற்பத்தியை நிறுத்திவிட்டோம். ஆனால், எந்திரங்களை சுத்தம் செய்ய எங்களுக்கு 15 மணிநேரம் தேவைப்பட்டது. இது மிகக் கொடுமையான விசயம். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தோம். அவர்கள் இந்த கேன்கள் எங்கிருந்து வந்தன, எந்த நகரங்கள் வழியாக வந்தன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்” என்றனர்.

இதற்கிடையே கோக்ககோலா நிறுவனம் இந்த செய்தியால் உலகளவில் தனது விற்பனை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக விளக்கத்தை அளித்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது-

எங்களின் பொருட்களின் தரத்துக்கும், பாதுகாப்புக்கும் நாங்கள் அதிகமான முக்கியத்துவம் அளிப்போம். லிஸ்பர்ன் நகரின், நாக்மோர்ஹில் பகுதியில் உள்ள எங்கள் நிறுவனத்தில் காலியான கேன்களில் மனிதக்கழிவுகள் இருந்ததை நாங்கள் அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். இந்த விசயத்தை மிகவும் தீவிரமாகக் கையான்டு, எப்படி நடந்தது என்பது குறித்து போலீசாரின் உதவியுடன் விசாரிப்போம்”

இந்நிலையில், வடக்கு அயர்லாந்து போலீசார் தங்களது முதல்கட்ட விசாரணையை தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

click me!