கொத்துக் கொத்தாக மடியும் மக்கள்...!! தலையில் அடித்துக் கதறும் உலக நாடுகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 30, 2020, 6:44 PM IST
Highlights

உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கடுமையாக நோய் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையிலுள்ள பிரேசிலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கட்டாயம்  முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாதவர்கள், சபையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெளோசி தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலக அளவில் 1 கோடியே 71 லட்சத்து 79 ஆயிரத்து 92 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1 கோடியே 69 லட்சத்து  30 ஆயிரத்து 12 பேர் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் 6 லட்சத்து 69 ஆயிரத்து 982 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. அங்கு 45 லட்சத்து 68 ஆயிரத்து 375 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 1 லட்சத்து 53 ஆயிரத்து 248 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் அங்கு நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அவசியம் 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர நான்சி பெளோசி,  தனது உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்கள் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதை மீறுபவர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். குடியரசு கட்சியின் டெக்சாஸ் மாகாண உறுப்பினர் லூயிஸ் கோமர்ட், பெரும்பாலான நேரங்களில் சபையில் முகக் கவசம் அணியாமல் இருந்துவந்தார்,  இந்நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே,  சபாநாயகர் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.  உறுப்பினர்கள் சபையில் பேசும்போது மட்டும் முகக் கவசத்தை அகற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இதுவரை ஜனநாயக கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், குடியரசு கட்சியை சேர்ந்த 7 உறுப்பினர்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பெளோசி கூறினார். 

பிரேசிலில் உயிரிழப்பு 90 ஆயிரத்தை கடந்தது:

உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கடுமையாக நோய் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையிலுள்ள பிரேசிலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. இது சர்வதேச நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது, இதுகுறித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள தகவலின் படி, பிரேசிலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 288 ஆக அதிகரித்துள்ளது எனவும், பிரேசிலில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். எனவும், கடந்த புதன்கிழமை  மட்டும் சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு அதிபர் பொல்சனரோ, கொரோனா வைரஸ் பரவல்  குறித்த சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. அதற்காக அமைக்கப்பட்ட விஞ்ஞானிகளின் குழு பிரேசிலின் சாண்டா மார்டா சேரிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. எந்தெந்த நபர்களுக்கு நோய்த்தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது, எந்தெந்த பகுதிகளில் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என்பது குறித்து இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. 

சீனாவில் வேகமெடுக்கும் வைரஸ் :

சீனாவில் கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், மீண்டும் அங்கு வைரஸ் தொற்று தீவிரமாகி வருகிறது. இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த சுமார் 2059 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. சீன அரசு மேலும் மூன்று மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது, குவாண்டோங், யுன்னன் மற்றும் ஷாங்க்சி, தற்போது இந்த மூன்று மாநிலங்களில் மட்டுமே கொரோனா வைரஸ் படு வேகமாக உள்ளது என்றும், பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு அது உறுதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் உயிரிழப்பு 1.53 லட்சத்தை கடந்தது :

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை ஒரு லட்சத்து  53 ஆயிரத்து 848 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே  அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்க சுகாதார அமைச்சகம் மற்றும்  பணிக்குழு வெளியிட்டுள்ளன  புள்ளிவிவரங்களின் படி பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.5 மில்லியனை தாண்டியுள்ளது.  இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து முறையான தகவல்கள் விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது


ஐக்கிய அரபு எமிரேட் வைத்த குற்றச்சாட்டு:

ஐக்கிய அரபு எமிரேட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 59 ஆயிரத்து 921 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் நிலை சீராக இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை 375 வைரஸ் தொற்று பதிவாகி உள்ளன. மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளால் ஆபத்து அதிகரித்துள்ளது என்று அரபு எமிரேட் கூறியுள்ளது. எனவே அனைவரும் கட்டாயம் முககவசத்தை பயன்படுத்த வேண்டும் என அரசாங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
 

click me!