சும்மா இருக்கமாட்டங்க போல சீனர்கள்... சீனாவில் மீண்டும் தொடங்கியது நாய், பூனை, வவ்வால் இறைச்சி விற்பனை!

By Asianet TamilFirst Published Mar 30, 2020, 9:11 PM IST
Highlights

தென்மேற்கு சீனாவின் குயிலினில் பரவலான உட்புற சந்தையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் திரண்டனர். பெரும்பாலானோர் நாய், பூனை, வவ்வால் போன்ற இறைச்சிகளையே வாங்கிச் சென்றனர். நாய், பூனை இறைச்சியுடன் சலுகைகளையும் கடைகள் வாரி வழங்கியதால், சீனர்கள் இறைச்சியைப் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். 
 

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுவரும் சீனாவில், மீண்டும் பாம்பு, நாய், பூனை, வவ்வால் மாமிசங்களின் விற்பனை தொடங்கியுள்ளன.
சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரிலிருந்து கிளம்பிய கொரோனா வைரஸ் அந்த நாட்டை முடக்கிப் போட்டது. வூஹான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்துதான் கொரோனா வைரஸ் கிளம்பியதாக சந்தேகம் எழுந்தது. கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை அடுத்து வூஹான் நகரை மூடி சீல் வைத்தது சீன அரசு. அந்த நகர மக்கள் வெளியேறவும் வேறு நகரங்களிலிருந்து வூஹானுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து கிளம்பிய கொரோனா வைரஸ், இன்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவிலிருந்து கிளம்பிய இந்த வைரஸால், பல நாடுகளும் அந்த நாடு மீது கோபத்தில் உள்ளன.
இதற்கிடையே வைரஸ் தாக்கத்தால் சீனாவில் பன்றி, நாய், பூனை, எலி, ஓநாய்கள், பாம்பு போன்ற இறைச்சிகள் உண்பதை சீனர்கள் கைவிட்டனர். இதனால், சீனாவில் இறைச்சி விற்பனை மொத்தமாகப் படுத்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இறைச்சிக் கடைகள் இழுத்து மூடப்பட்டன. தற்போது சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. சீனாவில் கடந்த 2 மாத காலமாக இருந்த ஊரடங்குக்குப் பிறகு இயல்பு நிலை மெல்ல மெல்லமாக திரும்பிவருகிறது. வூஹான் நகர் அமைந்துள்ள ஹூபே மாகாணமும் இயல்புநிலைக்கு திரும்பிவருகிறது.


சீனாவில் கொஞ்சம் இயல்பு நிலை திரும்பிய நிலையில் இறைச்சி பழக்கத்தைக் கைவிட்டிருந்த சீனர்கள், இறைச்சிக் கடையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.  நேற்று முன்தினம் தென்மேற்கு சீனாவின் குயிலினில் பரவலான உட்புற சந்தையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் திரண்டனர். பெரும்பாலானோர் நாய், பூனை, வவ்வால் போன்ற இறைச்சிகளையே வாங்கிச் சென்றனர். நாய், பூனை இறைச்சியுடன் சலுகைகளையும் கடைகள் வாரி வழங்கியதால், சீனர்கள் இறைச்சியைப் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். 
 நாய், பூனை, வவ்வால் மட்டுமல்லாமல் பாம்பு, தேள், முயல், வாத்துகள் போன்றவையும் விற்பனையில் வைக்கப்பட்டிருந்தன. கொரோனா வைரஸிலிலிருந்து முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் தங்களுடைய ‘பாரம்பரிய!’ இறைச்சி உணவுக்கு சீனர்கள் திரும்பியுள்ளனர்.

click me!