உழைத்து சம்பாதித்த சொத்தை மக்களுக்காக வழங்கிய தொழிலதிபர்..!! துபாயை நெகிழவைத்த இந்தியர்...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 30, 2020, 6:41 PM IST
Highlights

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அவர்,   கடந்த 25 ஆண்டுகளாக துபாய் மண்ணில் வாழ்ந்து வருகிறேன் .  தற்போது கொரோனா  வைரஸ் காரணமாக துபாய் பொலிவிழந்து வருகிறது . 
 


சுமார் 25 ஆண்டு காலமாக உழைத்து சம்பாதித்த பல நூறு கோடி மதிப்புள்ள சொத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துபாய் வாழ் மக்களுக்கு இந்திய தொழிலதிபர் ஒருவர் இனமாக வழங்கியுள்ளார் .  அவரின் இந்த செயல் துபாய் மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா என அனைத்து கண்டங்களிலும் பரவி மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த வைரஸ் இந்நிலையில்  சர்வதேச நாடுகள் இந்த வைரசில் இருந்து தப்பிக்க கடுமையாக போராடி வருகின்றனர் . வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  சிகிச்சை அளிக்க மிகுந்த பொருளாதார தேவை அந்தந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது . 

 இந்நிலையில் இந்த வைரஸ் அரபு நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ள நிலையில்,  அந்தந்த நாட்டில் வசிக்கும் தொழிலதிபர்கள் செல்வந்தர்கள் தங்களால் முடிந்த உதவிகளை அந்நாட்டு மக்களுக்கு செய்து வருவதுடன்,  அரசுக்கும் பொருளாதார உதவி வழங்கி வருகின்றனர் .  இந்நிலையில் துபாயை சேர்ந்த இந்திய தொழிலதிபர் அஜய் சோப்ரா என்பவர் துபையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவமனை அமைக்க தனது சொத்தை அந்நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார் .  கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் துபாயில் நகைக்கடை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அவர்,   கடந்த 25 ஆண்டுகளாக துபாய் மண்ணில் வாழ்ந்து வருகிறேன் .  தற்போது கொரோனா  வைரஸ் காரணமாக துபாய் பொலிவிழந்து வருகிறது . 

 துபாய் மீண்டும் அதே பழைய பொலிவைப் பெற வேண்டும் என்பதற்காக ஜூமேய்ரா லேக் டவர் எனப்படும் தனக்கு சொந்தமான மிகப்பெரிய கட்டிடத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றிக்கொள்ள வழங்குகிறேன் என தெரிவித்துள்ளார் .  இந்த கட்டடம் 77 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது அதில் சுமார் 400 பேருக்கு மேல் சிகிச்சை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது .  துபாய்க்கு வந்து சேர்த்த சொத்தை துபாய்  மக்களை பாதுகாக்க உதவியாக இருக்கும் என்பதனால் அரசுக்கு இந்த உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார் .  துபாயில் இதுவரை 570 பேருக்கு  வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடான் இதுவரை அந்த வைரசுக்கு அங்கு 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது .
 

click me!