கீழே விழுந்து வெடித்துச் சிதறிய சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்பு பெட்டி சேகரித்த தகவவல்களை அமெரிக்க புலனாய்வு வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.
மார்ச் மாத வாக்கில் சீனாவின் தெறஅகரு குவாங்சி பகுதியில் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என கருப்பு பெட்டி விவரங்கள் தெரிவித்து இருக்கிறது. கருப்பு பெட்டியில் பதிவாகி இருந்த தகவல்களை ஆய்வு செய்ததில் இவ்வாறு தெரியவந்துள்ளது.
132 பயணிகங்களை ஏற்றிக் கொண்டு தரையில் இருந்து 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போயிங் 737 விமானம் விபத்தில் சிக்கும் போது மணிக்கு 700 மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டு இருந்தது. விமானம் விழுந்து நொறுங்கியதை அடுத்து அதில் பயணம் செய்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவே இல்லை. இந்த விபத்து சீன வானியல் துறையில் 28 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக கொடூரமான விபத்தாக மாறியது.
திட்டமிட்ட விபத்து:
கீழே விழுந்து வெடித்துச் சிதறிய சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்பு பெட்டி சேகரித்த தகவவல்களை அமெரிக்க புலனாய்வு வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். அதன்படி காக்பிட்டில் இருந்த யாரோ தான் விமானத்தை வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என தெரிவித்து உள்ளனர்.
இத்தகைய விபத்து நடைபெற இருக்கும் சூழலில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் அருகாமையில் பறந்து கொண்டு இருந்த விமானங்கள் மேற்கொண்ட தொடர் அழைப்புகளுக்கு ஈஸ்டர்ன் விமானத்தில் இருந்த யாரும் பதில் அளிக்கவே இள்லை.
சீன பயணம்:
அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜெனிபர் ஹோமெண்டி இது பற்றி கூறும் போது, அமைப்பின் புலனாய்வு செய்யும் நிபுணர்கள் சீனா புலானாய்வு பணிகளில் ஒத்துழைப்பு வழங்க சீனாவுக்கு சென்றுள்ளனர். இவர்களின் ஆய்வில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் விமானத்தில் எந்த பாதுகாப்பு குறைபாடுகளும் இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை.
விபத்து பற்றிய ஆய்வு பணிகளுக்கு தாங்கள் பொறுப்பில்லை என ஏர்லைன் சார்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது. இது பற்றிய தகவல்களை சீன அரசு தான் கூற வேண்டும். இதுபற்றி அந்நாட்டு அரசு தரப்பில் கூறும் போது ஏப்ரல் 20 தேதி வரை சேதமடைந்த கருப்பு பெட்டியை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.