சீனாவில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சாங்சுன் நகரில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சாங்சுன் நகரில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபின் அந்த வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்தது. ஏறக்குறைய கொரோனா வைரஸால் உலகளவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், கோடிக்கணக்கில் பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு நாடும் கொரோனா வைரஸின் பிடியிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன. அதற்குள் சீனாவில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் கொரோனா வைரஸ் 3-வது அலை, 4-வது அலையை நோக்கி நகர்ந்து வருகிறது ஆனால் முடிவுக்கு வரவில்லை. இந்த கொரோனா வைரஸால் சீனாவில் பாதிக்கப்பட்டதைவிட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும்தான் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.
ஐரோப்பாவில் பல நாடுகளிலும், அமெரிக்காவிலும் உள்ள மக்கள் பெரும்பலானோர் 2 தடுப்பூசி செலுத்தியபின்பு, பூஸ்டர் தடுப்பூசியும் இன்னும் கொரோனா மீதான அச்சம் போகவில்லை. இப்போது சீனாவில்அடுத்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்துகிறது.
சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சுன் நகர் உள்ளது. இந்த நகரில் ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கல். இந்த நகரில்தான் புதிய வைரஸ் மக்களுக்கு பரவி வருகிறது. இதையடுத்து, இந்த சாங்சுன் நகர் முழுவதும்ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் என்ன, எப்போதிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.