எல்லையில் படைகளை குவித்து சீன் போட்ட சீனா, இப்போது இந்தியாவிடம் கதறல்..!! ஏன் தெரியுமா..??

By Ezhilarasan BabuFirst Published Jun 1, 2020, 6:16 PM IST
Highlights

அதாவது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்திய  சீன எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவையும், சீனாவையும் மோதவிட அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிப்பதாக சீனாவின் குளோபல் டைம்ஸ் வார இதழ் குற்றம்சாட்டியுள்ளது. சீனா மற்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த சக்தி, ஆசியாவிலும் வெளிநாட்டிலும் தங்கள் நலன்களை பாதிக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது என்றும் குளோபல் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய-சீன உறவில், மோதலே அமெரிக்காவுக்கு நல்லது என்று அவர்கள் கருதுகிறார்கள். எனவே இரு நாடுகளுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதை அவர்கள் ஒருபோதும் கைவிடவில்லை. அமெரிக்கா இந்த பகுதியின் அமைதி மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தும்.

இதில் இந்தியாவும், சீனாவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அமெரிக்காவே முதல் என்ற அவர்களின் கொள்கை இந்தியாவின் நலன்களுடன் பொருந்துவது அல்ல. ஆசியாவின் மிகப்பெரிய சக்திகளான இந்தியாவும் சீனாவும் எல்லையை பகிர்ந்து வருகின்றனர் என்பதை இறுதிக்கட்டத்தில் உணர்ந்துள்ளார் ட்ரம்ப் என அந்த இதழ் அவரை கிண்டல் செய்துள்ளது. இந்தியாவும் சீனாவும் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை என்று சொன்னபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அதிர்ச்சி அடைந்தார் என வாஷிங்டன் போஸ்ட் நிருபர்கள் இருவர் எழுதிய " எ வெரி ஸ்டேபிள் ஜீனியஸ் " என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை அக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆண்டு காஷ்மீர் தொடர்பான ட்ரம்பின் சமரசத்தை இந்தியா நிராகரித்தது. அமெரிக்கா நம்பகமான பங்காளி அல்ல என்பதை இந்தியா உணர்ந்திருக்க வேண்டும். 

சமரசத்தில் அமெரிக்காவின் மோசமான வரலாறு குறித்தும் இந்தியா அறிந்து இருக்கும், பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக அமெரிக்கா குழப்பத்தை உருவாக்கி இருதரப்பு பிரச்சினைகளை சர்வதேச மோதலாக மாற்ற  முயற்சிக்கிறது என்றும் குளோபஸ் டைம் எழுதியுள்ளது. அதாவது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்திய  சீன எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இருநாடுகளும் படைகளை குவித்து வரும் நிலையில் ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளின் பார்வையும் இந்தியா -சீனா எல்லை நோக்கி திரும்பியுள்ளது. உலகில் இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சமரசம்  செய்யவும்,  இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யவும் அமெரிக்கா தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில்,  அதை இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளும் புறக்கணித்தன, இந்நிலையில் குளோபல் டைம்  அமெரிக்காவை கண்டித்தும் இந்தியாவை எச்சரித்தும் இவ்வாறு கட்டுரை வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

 

click me!