இந்தியாவுக்கு நாங்கள் இருக்கிறோம்..!! சீனாவை மறைமுகமாக எச்சரித்த அமெரிக்கா..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 1, 2020, 3:39 PM IST
Highlights

தென்சீனக்கடல் பகுதியிலும்,  இந்திய எல்லையிலும் சீனாவின் நடவடிக்கை குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த மைக் பாம்பியோ கூறியதாவது :- ,  இந்திய- சீன எல்லை, தென் சீனக் கடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அசாதாரண சூழ்நிலையை சீனர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

தனது சொந்த நலனுக்காக சீனா பூமியில் திட்டமிட்டு அபாயகர சூழலை உருவாக்குகிறது  எனவும்,  தற்போது இந்திய எல்லையில் சீனா அச்சுறுத்தி வருவதுபோல நீண்ட நாட்களாக அது அச்சுறுத்தி வருகிறது எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை  செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்திய சீன எல்லையில் கடந்த சில நாட்களாக  பதற்றம் நீடித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். உலகமே கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில்,  இந்தியா சீனா-பாகிஸ்தான் என்ற எதிரிகளிடம் இருந்து நாட்டைக் பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த மே -5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இந்திய சீன  எல்லையான  பாங்காங் த்சோ என்ற ஏரி பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. அதில் இருதரப்பிலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல் ஒன்பதாம் தேதி சிக்கிமை ஒட்டியுள்ள நகுலா பாஸ் என்ற இடத்தில் இந்திய-சீன படைகளைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் நேரடியாக மோதிக் கொண்டனர். அதில் இரும்பு கம்பி, தடிகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதுடன்,  ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்து தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.  அதில் இருதரப்பிலும் ஏராளமானோர் காயமடைந்தனர். 

அதைத்தொடர்ந்து இருதரப்பிலும் லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில்,  பிரச்சனைகள் தணிந்தன.  ஆனால் மே-22ஆம் தேதி இந்திய-சீன எல்லையான கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய வீரர்கள் அத்துமீறி சீன எல்லைக்குள் நுழைந்ததாக இந்திய ராணுவ வீரர்கள் மீது புகார் கூறியதுடன் எல்லையில் ஏராளமான  படைகளை குவித்து வருகிறது. இதனால்  கால்வான் பள்ளத்தாக்கு பகுதி,  பாங்கொங் த்சோ ஏரி உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீன ராணுவத்துக்கு நிகராக இந்தியாவும் தனது படைகளை குவித்து வருகிறது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் போர் மேகம் சூழ்ந்துள்ளது. கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக எல்லையில் இரு நாடுகளும் படைகளை  குவித்து வருவதால்,  பல்வேறு சர்வதேச நாடுகளின் பார்வையும் இந்திய-சீன எல்லைப் பக்கம் திரும்பியுள்ளது.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ,  சீனா தன்னுடைய சுயநலத்திற்காக திட்டமிட்டு ஒரு பதட்டமான சூழ்நிலையை பூமியில்  உருவாக்கி வருகிறது,  தற்போது இந்தியா எல்லையில் நடப்பதைப் போல நீண்டகாலமாக சீனா, இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. 

தென்சீனக்கடல் பகுதியிலும்,  இந்திய எல்லையிலும் சீனாவின் நடவடிக்கை குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த மைக் பாம்பியோ கூறியதாவது :- ,  இந்திய- சீன எல்லை, தென் சீனக் கடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அசாதாரண சூழ்நிலையை சீனர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். அதை தங்கள் சுயநலத்திற்காக  செய்கின்றனர். தற்போது பூமியில் ஏற்பட்டு வரும் ஒவ்வொரு பிரச்சனையிலும் அவர்களின் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது.  இது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.  இந்திய எல்லையில் பதற்றமான சூழ்நிலையை சீனா ஏற்படுத்துவது நீண்டகாலமாக நடந்து வருகிறது.  சீனாவைப் பொறுத்தவரையில் அதனுடைய ராணுவ நடவடிக்கைகள் அத்தனையும் உண்மையே,  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும்,  சீன ஜனாதிபதியுமான ஜி ஜின் பிங்,  சீனாவின் ராணுவ திறன்களை வளர்ப்பதில் தீவிரமாக  ஈடுபட்டு வருகிறார்.  தற்போது சீனாவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை புரிந்து கொள்ளவும் அதை  உறுதி செய்யவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என பாம்பியோ கூறியுள்ளார்.  மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான், பிரேசில் போன்ற நாடுகளுடன் அமெரிக்கா நல்ல கூட்டாளியாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். 

நாங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நல்ல பங்காளிகளாக இருக்க முடியும், அடுத்த நூறு ஆண்டில் ஒரு சிறந்த மேற்கத்திய நாடாக அமெரிக்கா இருக்கும் எனவும் கூறியுள்ளார். தற்போது 60 க்கும் மேற்பட்ட மசோதாக்கள் சீனாவுக்கு எதிராக தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார்.  சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கத்திய கருத்துக்களுக்கும், மேற்கத்திய ஜனநாயகத்திற்கும், மேற்கத்திய கொள்கைகளுக்கும் எதிராக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. இது அமெரிக்கர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது. அமெரிக்க அறிவுசார் சொத்துக்களை திருடுவது,  அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மற்றும் மில்லியன் கணக்கான வேலைகளை அழிப்பது, அல்லது தென் சீன கடலில் ஆபத்தான முறையில்  அமெரிக்க வணிக போக்குவரத்துக்கு வாய்ப்பை மறுப்பது போன்ற நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளை தட்டிக்கேட்க முதல் முறையாக அமெரிக்காவில் ஜனாதிபதி ஒருவர் இருக்கிறார்,  அவர்  அமெரிக்க மக்களை பாதுகாக்க தயாராக இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

 

click me!