தைவான் விவகாரத்தில் வெளி சக்திகள் தலையிடுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் , நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க சீனா ராணுவம் நடவடிக்கைகளையும் எடுக்க தயங்காது
சீனாவிலிருந்து தைவான் பிரிவதை பெய்ஜிங் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என சீன உயர்மட்ட அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் . தைவான் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்து வரும் நிலையில் மூன்றாவது நாடு இதில் தலையிடும் பட்சத்தில் சீனா தன் ராணுவ வலிமையை பயன்படுத்த தயங்காது என சீனா-தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் " மா சியோகுவாங் " எச்சரித்துள்ளார். தைவானின் முதல் பெண் ஜனாதிபதியான சாய் இங்-வென் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில் அமெரிக்கா அவருக்கு வாழ்த்துக் கூறியதை பொறுத்துக் கொள்ள முடியாத சீனா, இவ்வாறு எச்சரித்துள்ளது.
சீனா பல ஆண்டுகளாக தைவானை தனது காலனி நாடாக பாவித்து வருகிறது , ஆனால் கடந்த 1949-இல் நடந்த யுத்தத்தில் சீனாவிலிருந்து தைவான் பிரிந்தது . அதன் பின்னர் தைவான் தன்னை ஒரு சுயாட்சி பிரதேசமாக அறிவித்து வந்தாலும் , பெரும்பாலான நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்து வருகின்றன . அதே நேரத்தில் சீனாவும் தைவான் மீது பழையபடி உரிமை கொண்டாடி வருகிறது . சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் முற்றிவரும் இந்நிலையில் சீனாவுக்கு எதிராக தைவானின் சுதந்திரப் பிரகடனத்தை அமெரிக்கா ஆதரிக்க தொடங்கியுள்ளது . தைவானில் சுயாட்சி மற்றும் ஜனநாயகம் மலர அமெரிக்கா விரும்புகிறது எனறும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஆட்சிக்கு வந்த பிறகு தைவான் விஷயத்தில் அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டியும் வருகிறது .
தைவான் மற்றும் தென் சீன கடல் பிரச்சனைகளில் மத்தியஸ்தம் செய்வதாக கூறி அமெரிக்கா தனது கப்பற்படை கப்பல்களை தென் சீன கடல் பகுதியில் நிறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது . ஏற்கனவே பலமுறை இந்த விவகாரத்தில் சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது . அதாவது தைவான் விவகாரத்தில் எந்த நாடாவது தலையிட முயற்சி செய்தால் தைவானை காக்க சண்டையிடுவது மட்டுமே சீனாவின் இறுதி முடிவாக இருக்கும், சீனா தனது பாதுகாப்பிற்காக மட்டுமே ஆசியாவில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை சீனா ஒருபோதும் விரும்பவில்லை என எச்சரித்துள்ளது .
இந்நிலையில் தைவானின் முதல் பெண் ஜனாதிபதியான சாய் இங்-வென் , மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தைவானின் ஜனாதிபதி ஆகியுள்ளார் புதன்கிழமையன்று பதவியேற்றுக்கொண்ட அவருக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ வாழ்த்து கூறியுள்ளதுடன் , தைவானின் சுதந்திரத்திற்கு அமெரிக்கா துணை நிற்கும் எனவும் கூறியுள்ளார் . அவரின் இந்த கருத்து சீனாவை கடுங்கோபமடைய வைத்துள்ளது . மைக் பாம்பியோவுக்கு பதிலடி கொடுத்துள்ள சீன உயர்மட்ட செய்தி தொடர்பாளரும் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தி தொடர்பாளருமான மா சியோகுவாங் , சீனாவிலிருந்து தைவான் பிரிந்ததை பீஜிங் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை . சீனா-தைவானை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறது . மேலும் அதனுடன் இணைவதற்கு மெண்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ,
சீனா-தைவான் தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க சீனாவுக்கு போதுமான ராணுவ திறன் உள்ளது . தைவான் பீஜிங் பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது சீனாவின் உள்அரசியலில் தலையிடும் வெளி சக்திகளை சீனா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது . ஹாங்காங் போலவே தைவானையும் ஒரு நாடு இரண்டு அமைப்புகள் கொள்கையில் சீனா நிர்வகிக்கும் , இந்நிலையில் தைவான் விவகாரத்தில் வெளி சக்திகள் தலையிடுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் , நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க சீனா ராணுவம் நடவடிக்கைகளையும் எடுக்க தயங்காது என அவர் வெளிப்படையாக அமெரிக்காவை எச்சரித்துள்ளார் .