அந்த இளம் நர்ஸ், செவிலியர்கான உடையை அணியாமல் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து அதன் மேல் பாதுகாப்பு உடல் கவசமான PPE-யை அணிந்து பணிபுரிந்துள்ளார். PPE-க்கள் கண்ணாடி இழை போன்றே இருக்கும் என்பதால் செவிலியர் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தது வெளியே தெளிவாக தெரிந்தது. இதனுடனேயே அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
உலகளவில் பெரும் அச்சுறுத்தலை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய நிலவரப்படி உலகளவில் 50,85,504 மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்து 3,29,731 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா தொற்று கட்டுபடுத்தப்பட்ட நிலையில் உலகின் பிற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வரும் வைரஸ் மனித இனத்திற்கு பெரும் நாசத்தை விளைவித்து வருகிறது.
கொரோனா வைரஸ் நோய்க்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வில்லை. கடந்த 3 மாத காலமாக மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனிடையே மருந்தே இல்லாத ஒரு நோய்க்கு ஒட்டுமொத்த மருத்துவ துறையும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்களும், செவிலியர்களும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமை சிகிச்சையில் வைத்து கவனித்ததன் பலனாக தற்போது வரை உலகில் வைரஸ் தாக்கப்பட்டவர்களில் 20,21,666 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு நோயாளிகளுடன் நெருங்கி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களும், செவிலியர்களும் முகக் கவசம், உடல் கவசம்(PPE) போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பர். கண்ணாடி இழை போன்று இருக்கும் PPE-யை அணிந்தால் சுமார் 6 மணி நேரத்திற்கு அதை கழற்ற முடியாது. அந்த உடல் கவசம் அணிந்த செவிலியர் ஒருவரால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோ அருகே இருக்கிறது துலா நகரம். இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. ஆண் மற்றும் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் வார்டில் 20 வயது இளம்பெண் ஒருவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அந்த இளம் நர்ஸ், செவிலியர்கான உடையை அணியாமல் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து அதன் மேல் பாதுகாப்பு உடல் கவசமான PPE-யை அணிந்து பணிபுரிந்துள்ளார். PPE-க்கள் கண்ணாடி இழை போன்றே இருக்கும் என்பதால் செவிலியர் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தது வெளியே தெளிவாக தெரிந்தது. இதனுடனேயே அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதை அங்கிருந்த பலர் ஆச்சரியத்துடனும் அதிசயத்துடனும் பார்க்க யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பரவ விட்டார். அது தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் அந்த செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட செவிலியர், நர்ஸ்க்கான உடை அணிந்து அதன்மீது PPE-யை அணிந்தால் அசௌகரியமாக இருக்கும். மேலும் வெப்பம் அதிகமாகி வியர்க்கும் எனக்கருதியே உள்ளாடைகளை மட்டும் போட்டுக்கொண்டு அதன்மேல் PPE-யை அணிந்து பணிபுரிந்ததாக கூறியிருக்கிறார். எனினும் பாதுகாப்பற்ற முறையில் அநாகரீமாக நடந்தாக செவிலியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலகமே இந்த இக்கட்டான நேரத்தில் உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் கடவுள் போல நினைத்து போற்றும் வேளையில் செவிலியர் ஒருவரின் செயல் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. ரஷ்யாவில் தற்போது வரை 3,08,705 மக்கள் பாதிக்கப்பட்டு 2,972 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.