"சீனர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்..!!" - சீனாவின் அதிரடி அறிவிப்பால் போர் மூளுமா?

First Published Jul 8, 2017, 4:18 PM IST
Highlights
china warning chines to dont go to india


சிக்கிம் மாநிலத்தில், டோக்லாம் பகுதியில் சாலை அமைக்க முயன்ற சீன ராணுவத்தை , இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவும் சாலை அமைக்க கடும் எதிர்ப்புத் தெவித்து வருகிறது.

இதனால் சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, பூடான், சீனா ஆகியவற்றின் முச்சந்திப்பில் இந்திய மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில்  சிக்கிம் மாநில எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்து இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்ததால் அங்கு இந்தியா ராணுவத்தை இந்தியா குவித்து வைத்துள்ளது.

சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். . இதேபோல் சீன ராணுவமும் ஏராளமான ராணுவ வீரர்களை குவித்து வைத்துள்ளது. இதனால் சிக்கிம் மாநில எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. 

இந்நிலையில், இந்தியாவுக்கு செல்லும் தனது நாட்டு மக்களுக்கு சீனா பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், இந்தியா செல்லும் சீனர்கள், பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் . தேவையில்லாமல் அங்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தூதரகத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும் இது பயண எச்சரிக்கை அல்ல என்றும்  பயண அறிவுரை ஆகும் என்றும் சீன ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

click me!