இன்னும் எவ்வளவு பேரை இழக்கப் போகிறதோ சீனா... 7700 பேரை தாக்கியது கொரோனா...!! உச்சக் கட்ட பீதியில் ஜீஜின் பிங்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 30, 2020, 1:07 PM IST
Highlights

அறிவியல் ,  தொழில்நுட்பம் ,  மருத்துவம் என எல்லாத்துறைகளிலும் கோலோச்சிய சீனாவுக்கு கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது இந்த காய்ச்சலை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என  சீன அதிபர் ஜீ ஜின்பிங் கை விரித்துள்ளார் 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 170 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 7700 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் இது சீனாவை கண்ணீர் கடலில் தத்தளிக்க வைத்துள்ளது .  சீனாவின் ஹூபெய்  மாகாணத்தின் தலைநகரான  வுகானில்  முதன்முதலில் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி  கொரோனா மர்ம காய்ச்சல் கண்டறியப்பட்டது .  இந்த கொரோனா காய்ச்சல் கடல்  மீன்கள்,   வனவிலங்கு  மற்றும் கட்டுவிரியன் பாம்பு உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து பரவியதாக கூறப்பட்டது இந்த வைரஸ் கிருமி உருவான சில வாரங்களிலேயே  இது அதிவேகமாக பரவத்தொடங்கியது .  சீன தலைநகர் பீஜிங் ,  ஷாங்காய் போன்ற நகரங்களிலும் இது வேகமாக பரவியது . 

இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி  குறைந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த வைரஸ் தாக்க தொடங்கி முதல் வாரத்தில் 46 பேர் உயிரிழந்த நிலையில் அடுத்த சில தினங்களில் பலி எண்ணிக்கை 104 ஆக உயர்ந்தது ,  இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 25 பேர் பலியாகினர் ,  இதன்மூலம் பலி எண்ணிக்கை 132 ஆக இருந்தது இந்நிலையில் நேற்று மட்டும் 1459 நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதேபோல் வைரஸ் தத்துவத்தோடு எண்ணிக்கை 5, 974ஆக அதிகரித்துள்ளதாகவும் சீன தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.   இதில் 1239 நோயாளிகள் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது ஒட்டுமொத்தமாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7700 ஆக உயர்ந்துள்ளது இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது .

அறிவியல் ,  தொழில்நுட்பம் ,  மருத்துவம் என எல்லாத்துறைகளிலும் கோலோச்சிய சீனாவுக்கு கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது இந்த காய்ச்சலை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என  சீன அதிபர் ஜீ ஜின்பிங் கை விரித்துள்ளார் ,  ஆனாலும் இந்த வைரசின் தன்மை என்ன எந்த வகையைச் சார்ந்தது என்பது குறித்த ஆய்வில்  சீன மருத்துவர்கள் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். விரைவில் இதற்கு மருந்து கண்டுபிடித்து அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் அவர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது .

click me!