இந்தியாமீது உள்ள கோபத்தை இந்து பெண்கள் மீது காட்டும் பாகிஸ்தான்...!! மணமேடையில் இருந்த பெண்ணை தூக்கிப்போய் செய்த காரியம்...!!

By Ezhilarasan Babu  |  First Published Jan 29, 2020, 4:57 PM IST

வலுக்கட்டாயமாக மதம் மாற்றி  அவரை ஷாருக் குல் என்ற இளைஞருடன் அவரை திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது . இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் .


பாகிஸ்தானில் மணமேடைக்கு சென்ற இந்து பெண்ணை கடத்தி மதமாற்றம் செய்து இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது .  இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட பின்னர் பாகிஸ்தானில் வசித்த இந்துக்கள் அங்கேயே தங்கி விட்டனர் .  பின்னர் தன்னை ஒரு முஸ்லீம் நாடு என பாகிஸ்தான் அறிவித்துள்ளது இந்நிலையில் ,  அங்கு இந்துக்கள் மிகச் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர் .  இந்நிலையில் அங்குள்ள இந்துக்களை பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்திவருகிறார் . 

Latest Videos

இதனால் அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்கு தஞ்சமடையும் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .  இந்நிலையில் பாகிஸ்தான் சிந்து மாகாணம் மதியரி மாவட்டத்தில்  ஹலா பகுதியை  சேர்ந்தவர் கிஷோர் தாஸ் , இவரது  மகள் பாரதி பாய் ,   இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது  இந்நிலையில்  அந்த பெண் மனமேடையில் அமர்ந்திருந்த நிலையில் ,   திடீரென அங்கு வந்த ஒரு கும்பல் பாரதி பாயை தூக்கிச் சென்றனர்,   வலுக்கட்டாயமாக மதம் மாற்றி  அவரை ஷாருக் குல் என்ற இளைஞருடன் அவரை திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது .  இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் .   இந்நிலையில்  தன்னை காதலித்த பாரதி பாய் கடந்த டிசம்பர் மாதம் மதம் மாறியதாகவும் அவரது பெயர் புஷ்ரா என்றும் அதற்காக மதமாற்றச் சான்றிதழை   ஷாருக் குல் சமூகவளைதளத்தில் பகிர்ந்துள்ளார்.  

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறுபான்மையின அமைச்சர் , ஹரி ராம் கிஷோரி அறிக்கையை சமர்ப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார் .  இந்நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிகளுக்கு மத்திய அரசு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .  பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.   அதேபோல்  தொடர்ந்து இந்து கோவில்கள் பாகிஸ்தானில் தாக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.  இந்நிலையில்  அங்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளும் அதிகரித்துள்ளது ,  குறிப்பாக இந்து பெண்களை கட்டாய மதமாற்றம் செய்து  இஸ்லாமியர்களுக்கு  திருமணம் செய்து வைக்கும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பிடதக்கது.
 

click me!