எங்கள் நண்பன் பாகிஸ்தானுடன் எப்போதும் துணை நிற்போம்! பாச மழை பொழியும் சீனா!

Published : May 11, 2025, 12:37 PM IST
எங்கள் நண்பன் பாகிஸ்தானுடன் எப்போதும் துணை நிற்போம்! பாச மழை பொழியும் சீனா!

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எப்போதும் துணை நிற்போம் என்று சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் என்று கூறியுள்ளது.

China's support for Pakistan: இந்தியா உடனான தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பாகிஸ்தானுடன் எப்போதும் துணை நிற்போம் என சீனா கூறியுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நடந்த மோதல் நேற்று நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோரிக்கையை ஏற்று இரு நாடுகளும் இந்த முடிவை எடுத்துள்ளன. 

பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு 

இந்நிலையில், பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய சுதந்திரத்தைப் பேணுவதில் தனது நாடு பாகிஸ்தானுடன் துணை நிற்கும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சனிக்கிழமை தெரிவித்தார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் டார் சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இஷாக் டார், மாறிவரும் பிராந்திய நிலைமை குறித்து வாங் யீயிடம் விளக்கினார். சவாலான சூழ்நிலைகளில் பாகிஸ்தானின் நிதானத்தை வாங் யி ஒப்புக்கொண்டார். அதன் அணுகுமுறையைப் பாராட்டினார். 

சீனாவின் உறுதியான நண்பன் பாகிஸ்தான் 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இரு நாடுகளும் தொடர்ச்சியான உரையாடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும், வரும் நாட்களில் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேண ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. "பாகிஸ்தானின் அனைத்து வானிலை மூலோபாய கூட்டுறவு கூட்டாளியாகவும், உறுதியான நண்பராகவும் இருக்கும் சீனா, அதன் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்கும் என்பதை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்" என்று சீன வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் முடிவுக்கு வரவேற்பு 

மேலும், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீத்துடனும் இஷாக் டார் பேசினார். துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடனுடனும் இஷாக் டார் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை விளக்கிக் கூறினார். இதற்கிடையே இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த முயற்சி மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்புக்கு பாகிஸ்தான் நன்றி 

"பிராந்தியத்தில் அமைதியை வளர்ப்பதில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவத்திற்கும் தீவிரமான பங்களிப்பிற்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் நலனுக்காக நாங்கள் ஏற்றுக்கொண்ட இந்த முடிவுக்கு உதவியதற்காக அமெரிக்காவை பாகிஸ்தான் பாராட்டுகிறது'' என்று ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்தார். தெற்காசியாவில் அமைதிக்கு மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?