சீனா மீது திருட்டு பட்டம் கட்டிய அமெரிக்கா...!! ஒழுக்கக் கேடு என ஓங்கி அடித்த வெளியுறவுத்துறை..!!

By Ezhilarasan Babu  |  First Published May 14, 2020, 6:55 PM IST

சீனா தனது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ரீதியான  ரகசியங்கள் குறித்த தகவல் திருட்டில் ஈடுபட்டுள்ளது  என ஏற்கனவே அமெரிக்கா கூறிவரும் நிலையில் தற்போது தடுப்பூசி தகவல் திருட்டு புகார்  முக்கியத்துவம் பெற்றுள்ளது. 


கொரோனா வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களின் தகவல்களை சீனாவுடன் தொடர்புடைய கணினி ஹேக்கர்களால் திருடப்படலாம் என அமெரிக்காவின் (FBI)உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது , வைரஸ் தொடர்பான தடுப்பூசிகள் சிகிச்சைகள் மற்றும் சோதனைகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் தகவல்களை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும்  வைத்துக்கொள்ள வேண்டும் எனவும்  எச்சரித்துள்ளது.  கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவி வருகிறது,  வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்த வைரஸால் அமெரிக்காவே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . அதற்கடுத்தபடியாக  இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன .  கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள அத்தனை பாதிப்புகளுக்கும்  சீனாதான் காரணம் என்று அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் சீனா மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன . கொரோனா வைரஸ் சீனாவின் திட்டமிட்ட சதி என்றும்  அது வுஹான்  ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளிவந்தது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும்  அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர் .

Latest Videos

இந்நிலையில் இரு நாட்டுக்கும் இடையே  கொரோனா விவகாரத்தில் பனிப்போர்  நீடித்து வருகிறது, ஏற்கனவே அமெரிக்கா சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில் தற்போது அமெரிக்காவின்  (FBI) எனப்படும் கூட்டாட்சி புலனாய்வு முகமை , மற்றும் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி ஆகியவை இணைந்து ஊடகங்களின் வாயிலாக மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பாக கொரோனா ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களுக்கு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது,  ஆதாவது கொரோனா தொடர்பாக  பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களை குறிவைத்து   சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய  கணினி ஹேக்கர்கள் குருணை வைரஸ் தடுப்பூசிகள் சிகிச்சைகள் மற்றும் சோதனைகளை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அதன் தரவுகளை   திருடா வாய்ப்புள்ளது . எனவே ஆராய்ச்சி நிறுவனங்கள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,  இந்த அச்சுறுத்தல் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அதிகாரிகள் ,  தற்போது தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகளின் தகவலை திருடுவதற்கு அமெரிக்க நிறுவனங்கள் சீனாவால்  குறிவைக்க படலாம் என தெரிவித்துள்ளது .

 

சீனா தனது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ரீதியான  ரகசியங்கள் குறித்த தகவல் திருட்டில் ஈடுபட்டுள்ளது என ஏற்கனவே அமெரிக்கா கூறிவரும் நிலையில் தற்போது தடுப்பூசி தகவல் திருட்டு புகார்  முக்கியத்துவம் பெற்றுள்ளது.  இந்த எச்சரிக்கை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் ,தகவல்களை  பாதுகாப்பதற்கான  கூடுதல் தொழில்நுட்ப விவரங்கள் பின் வரும் நாட்களில் வெளியிடப்படும் என அமெரிக்க சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி  தெரிவித்துள்ளது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் ,   வைரஸ் தொடர்பான எந்தவிதமான தகவல்களையும்  திருடும் முயற்சி சீனாவுக்கு இல்லை ,  ஏனென்றால் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சிகளில் சீனா உலகிற்கே வழிகாட்டியாக இருக்கிறது என பதிலடி கொடுத்துள்ளார்.  எனவே எங்களுக்கு தகவல்களை திருட வேண்டிய அவசியம் இல்லை என மறுத்துள்ளனர் .  எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி சீனா மீது  வதந்தியை பரப்புவது ஒழுக்கக் கேடானது என அமெரிக்காவை அவர் எச்சரித்துள்ளார் . 
 

click me!