2 அல்ல... இனி 3 ஆக பெற்றுக்கொளுங்கள்... குழந்தை கட்டுப்பாட்டு திட்டத்தை நீக்கிய சீனா..!

By Thiraviaraj RMFirst Published May 31, 2021, 3:40 PM IST
Highlights

மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவில் பெற்றோர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாக அண்மையில் ஆய்வு முடிவு வெளியானது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. 140 கோடி பேர் சீனாவில் உள்ளனர். இந்த நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் சீனாவில் குடும்ப கட்டுப்பாட்டு முறை அமலில் உள்ளது. அதன்படி ஒவ்வொரு தம்பதியும் 2 குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் பெற்றுக்கொண்டால் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அவர்கள் அரசு திட்டங்கள் மூலம் பலன் பெற முடியாது.

இந்த திட்டம் விமர்சனத்தை சந்தித்தாலும் மிக கடுமையாக இது பின்பற்றப்பட்டது. ஆனால் இந்த திட்டம் காரணமாக சீனாவின் மக்கள் தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி மிகப்பெரிய சரிவை சந்தித்தால் இந்த திட்டத்தை தற்போது சீனா கைவிட்டுள்ளது.

சீனா இது தொடர்பாக எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் தொகை தொகை வளர்ச்சி சரிவை சந்தித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்தே தற்போது சீனாவில் 2 குழந்தை கட்டுப்பாடு திட்டம் முடிவிற்கு வந்துள்ளது, அங்கு மக்கள் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.


 

click me!