மத்திய கிழக்கு நாடுகளுக்கு சீனாவால் ஆபத்து..!! தலையில் அடித்துக் கதறும் அமெரிக்கா..!! காரணம் இது தான்.

By Ezhilarasan Babu  |  First Published Aug 10, 2020, 4:06 PM IST

இரு நாடுகளும் கூட்டாக இராணுவப் பயிற்சிகளை நடத்துதல், ஆயுதங்களை தயாரித்தல், இரு நாடுகளுக்கும் இடையில் உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


பயங்கரவாதிகளுக்கு உலகின் மிகப்பெரிய அடைக்கலமாக உள்ள ஈரானுக்குள், சீனா நுழைவது, மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என அமெரிக்க  வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார். உலகில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும்மிகப்பெரிய நாடு ஈரான், இத்தகைய சூழ்நிலையில் பணம் மற்றும் ஆயுதங்கள் சீனா மூலம் ஈரானுக்கு சென்றால், அப்பகுதியில் அமைதியின்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது சவுதி அரேபியா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையே  பல ஆண்டுகளாக வர்த்தகத்தில் பனிப்போர் நீடித்து வருகிறது, அதுமட்டுமின்றி தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம், ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம், வியட்னாமில் அரசியல் தலையீடு, உய்குர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான  இம்மோதல் பன்மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது, சீனா வேண்டுமென்றே கொரோனா வைரஸை உலகத்திற்கு பரப்பியதாக அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றஞ்சாட்டி வருகிறது. அதைத்தொடர்ந்து இருநாடுகளும் மாரி மாரி தங்கள் நாட்டில் இருந்த தூதரகங்களை  மூடியுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள்கேள்விக் குறியாகியுள்ளது. 

இந்நிலையில்  ஈரானுக்கும்-சீனாவுக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக உள்ளது. எண்ணெய் வளம் அதிகமுள்ள ஈரானுடன் 25 ஆண்டுகளுக்கு சீனா ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவலின்படி, ஈரான் கச்சா எண்ணெய்யை மலிவான விலையில் சீனாவுக்கு வழங்க உள்ளதாகவும், அதே நேரத்தில் ஈரானின் திட்டங்களில் சீனா ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய உள்ளதாகவும். இரு நாடுகளும் கூட்டாக இராணுவப் பயிற்சிகளை நடத்துதல், ஆயுதங்களை தயாரித்தல், இரு நாடுகளுக்கும் இடையில் உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் உள்ள சில கட்டுப்பாடுகளை மீறி, ஈரான்-சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா, ஈரான்- சீனா இடையேயான உறவை கடுமையாகவிமர்சித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மைக் பாம்பியோ ஃபாக்ஸ் நியூஸுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ஒப்பந்தம் என்ற பெயரில் ஈரானுக்குள் சீனா நுழைவது, மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியின்மைக்கு வழிவகுக்கும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் உலகின் மிகப்பெரிய நாடு ஈரான், இத்தகைய சூழலில்  பணம் மற்றும் ஆயுதங்கள் சீனா மூலம் ஈரானுக்கு கிடைக்கும் பட்சத்தில், அது சவுதி அரேபியா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். மேலும் அப்பிராந்தியத்தில் இது அமைதியின்மையை அதிகரிக்கும். எப்போதும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகத்திற்கு அச்சுறுத்தல்களை அதிகரித்து வருகிறது.  அதன் நடவடிக்கையால் உலகநாடுகள் சீனாவை ஒன்றுகூடி எதிர்க்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒவ்வொரு நாடும் ஜனநாயகத்தையும் அதன் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என பாம்பியோ தெரிவித்துள்ளார்.

 

click me!