China Plane Crash: திடீரென கீழே விழுந்து நொறுங்கிய விமானம்..பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி..

By Thanalakshmi V  |  First Published Mar 21, 2022, 4:22 PM IST

China Plane Crash: சீனாவிலிருந்து 133 பயணிகளுடன் சென்ற விமானம் குவாங்ஸி அருகே மலை பகுதியில் விழுந்து நொறுக்கி விபத்துக்குள்ளான காட்சி தற்போது வெளியாகியுள்ளது.இந்த விமானம் விழுந்து நொறுங்கிய சிசிடிவி காட்சிகளும் விமான விபத்துக்குள்ளான மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.


China Plane Crash: சீனாவிலிருந்து 133 பயணிகளுடன் சென்ற விமானம் குவாங்ஸி அருகே மலை பகுதியில் விழுந்து நொறுக்கி விபத்துக்குள்ளான காட்சி தற்போது வெளியாகியுள்ளது.இந்த விமானம் விழுந்து நொறுங்கிய சிசிடிவி காட்சிகளும் விமான விபத்துக்குள்ளான மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Tap to resize

Latest Videos

தெற்கு சீனாவில் குன்மிங்கிலிருந்து குவாங்சோவுக்கு  133 பயணிகளுடன் சென்ற சீன ஈஸ்டர்  பேசஞ்சர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் குவாங்ஸி என்ற மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதை உள்ளூர் மக்கள் உறுதி செய்துள்ளனர். போயிங் 737 விமானம் குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள கிராமப்புறங்களில் விபத்துக்குள்ளானது என்றும்  இதனால் மலைப்பகுதியில் மோதி அது பயங்கர தீயை ஏற்படுத்தியது என்றும் உள்ளூர் மக்கள் தெரிவித்ததாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.  அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அந்நாட்டின் பிரபர தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவின் குன்மிங்கிலிருந்து குவாங்சோவுக்கு 133 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நிலையில், விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து இவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

விமானம் பிற்பகலில் சராசரியாக 2.22 மணியளவில் விமான நிலையத்துடனான தொடர்பை இழந்துள்ளது. அப்போது விமானம் 3, 225 அடி உயரத்திலிருந்து பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்துக்குள்ளான 3.05 மணிக்கு தரையிறங்கிருக்க வேண்டும். ஆனால் விமான நிலையத்துடனான தொடர்பை இழந்ததால், அவசர செய்தி அனுப்பட்டு , தேடுதல் பணி நடைபெற்ற நிலையில் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

"

விமானம் மலைப்பகுதியில் நொறுங்கி விபத்துக்குள்ளானதால், மீட்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே சீனாவிலிருந்து 133 பயணிகளுடன் சென்ற விமானம் குவாங்ஸி அருகே மலை பகுதியில் விழுந்து நொறுக்கி விபத்துக்குள்ளான காட்சி தற்போது வெளியாகியுள்ளது.இந்த விமானம் விழுந்து நொறுங்கிய சிசிடிவி காட்சிகளும் விமான விபத்துக்குள்ளான மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

 

🔴Çin'de, içinde 133 kişinin bulunduğu Boeing 737 tipi yolcu uçağının düşme anı güvenlik kameralarına böyle yansıdı. Görüntülerde uçağın dik bir şekilde burnu üstüne yere çakıldığı görülüyor..

Footage of the crash of the passenger plane in pic.twitter.com/IcA9CidxUg

— jeo gaste (@jeogaste)
click me!